தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'வேலையிட விபத்துக்கு நிறுவன தலைமை நிர்வாக அதிகாரிகள் விளக்கம் தரவேண்டும்'

2 mins read
397116d1-2f63-453a-963e-bd4a58923fa1
-

தஞ்­சோங் பகார் வட்­டா­ரத்­தில் இருந்த 'ஃபியுஜி செராக்ஸ் டவர்ஸ்' கட்­ட­டத்தை நேற்று முன்­தி­னம் இடிக்­கும்­போது ஏற்­பட்ட விபத்­துக்கு கட்­டு­மான, பொறி­யி­யல் நிறு­வ­னங்­க­ளான 'வோ ஹப்', 'அய்க் சுன் டெமா­லி­ஷன் அண்ட் இஞ்­சி­னி­ய­ரிங்' ஆகி­ய­வற்­றின் தலைமை நிர்­வாக அதி­கா­ரி­கள் தனிப்­பட்ட முறை­யில் விளக்­கம் தர­வேண்­டும் என்று மனி­த­வள அமைச்சு கூறி­யுள்­ளது.

அந்த இடத்­தில் மேற்­கொள்ள வேண்­டிய சீர­மைப்­புப் பணி­களுக்­கும் அவர்­கள் பொறுப்­பேற்­றுக்­கொள்ள வேண்­டும் என்று அமைச்சு குறிப்­பிட்­டது.

சம்­ப­வத்­தில் 10 மீட்­டர் நீள­மும் 3.8 மீட்­டர் உய­ர­மும் கொண்ட கான்­கி­ரீட் சுவர் சாலை­யில் இடிந்து விழுந்து 20 வயது ஊழி­யர் மாண்­டார்.

இத்­த­கைய ஒவ்­வொரு சம்­ப­வ­மும் வேலை­யி­டப் பாது­காப்பு, சுகா­தா­ரம் ஆகி­யவை தொடர்­பில் நாம் மெத்­த­ன­மாக இருக்­கக்­கூ­டாது என்­பதை நினை­வூட்­டு­வ­தாக மனி­த­வள மூத்த துணை­ய­மைச்­சர் ஸாக்கி முக­மது நேற்று ஃபேஸ்புக்­கில் பதி­விட்­டார்.

"வேலை­யிட மர­ணம், காய­மடை­தல் தொடர்­பில் நடப்­பில் இருந்த எட்டு மாத உயர் பாது­காப்பு நிலை­யில் இருந்து வெளி­வந்­தா­லும் விழிப்பு நிலை­யைத் தொடர்­வது அவ­சி­யம்," என்­றார் அவர்.

'வோ ஹப்' நிறு­வ­னம் விபத்து நடந்த இடத்­தில் செயல்­ப­டு­கிறது.

'அய்க் சுன்' நிறு­வ­னம் மாண்ட ஊழி­யர் வினோத் குமாரை அங்கு பணி­யில் ஈடு­படுத்­தி­யது. விபத்­தை அடுத்து 2 மீட்­டர் ஆழத்­தில் இடி­பா­டு­களில் சிக்­கிக்­கொண்ட அவரை மீட்க ஏறத்­தாழ ஆறு மணி நேரம் பிடித்­தது.

'அய்க் சுன்' நிறு­வ­னம் வேலை­யி­டக் காய இழப்­பீட்­டுச் சட்­டத்­தின்­கீழ் வினோத்­கு­மா­ரின் குடும்­பத்­திற்கு இழப்­பீட்டுத்தொகை வழங்­கும் என்று திரு ஸாக்கி கூறினார்.

வினோத்­கு­மா­ரின் சக ஊழி­யர்­க­ளுக்கு மனிதவள அமைச்சு ஆத­ர­வுக்கரம் நீட்­டி­யுள்­ள­தா­க அவர் குறிப்பிட்டார்.

இவ்­வே­ளை­யில், சுவர் இடிந்து விழுந்­த­தற்­கான கார­ணத்­தைக் கண்­டு­பி­டிக்க விரை­வான, விரி­வான விசா­ரணை நடத்­தப்­பட வேண்­டும் என்று தேசி­யத் தொழிற்­சங்க காங்­கி­ர­சின் துணைத் தலை­மைச் செய­லா­ளர் மெல்­வின் யோங் வலி­ யு­றுத்­தி­யுள்­ளார்.