தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பராமரிப்புத் தொகை செலுத்தும்படி நொடித்துப்போனஆடவருக்கு உத்தரவு

2 mins read
1f719ef2-2c98-4c46-a524-253fb55a6ff3
-

வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக வீட்டை விற்று அதன்­மூ­லம் கிடைக்­கும் தொகை­யி­லி­ருந்து முன்­னாள் மனை­விக்­குப் பரா­மரிப்­புத் தொகை செலுத்­தும்­படி, நொடித்­துப்­போ­ன­தாக அறி­விக்­கப்­பட்ட ஆட­வ­ருக்கு நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

அவ்­வி­ரு­வ­ருக்­கும் இடையே திரு­ம­ணச் சொத்­து­கள் பிரிக்­கப்­படு­வ­தற்­கான வழக்­கில் மாவட்ட நீதி­பதி கெவின் ஹோ நேற்று அவ்­வாறு தீர்ப்­ப­ளித்­தார்.

நொடிப்­பு­நிலை விவ­கா­ரத்­தால் சிர­மம் ஏற்­பட்­டி­ருந்­தா­லும், பிரிக்­கப்­படும் சொத்­து­களில் திரு­மணத்­திற்­குப் பின் வாங்­கப்­படும் வீடு அடங்­கி­யி­ருப்­ப­தற்கு அனு­மதி உள்­ளது.

சிங்­கப்­பூ­ரில் வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கச் சொத்­து­கள் பொது வீட­மைப்­பின் ஒரு பகு­தி­யாக இருப்­ப­தால், அவை நொடிப்­பு­நிலைச் சட்­டத்­தின் செயல்­பா­டு­களி­லி­ருந்து பொது­வாக விலக்­கப்­ப­டு­கின்­றன.

எனவே வீடு விற்­கப்­ப­ட­வேண்­டும் என்­றும் அதன்­மூ­லம் கிடைக்­கும் தொகை­யி­லி­ருந்து முன்­னாள் மனை­விக்கு $100,000 தர­வேண்­டும் என்­றும் ஆட­வருக்கு உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது.

அதோடு, அவ­ரது மத்­திய சேம­நி­திக் கணக்­கி­லி­ருந்து $219,000 தொகை முன்­னாள் மனை­வி­யின் கணக்­கிற்கு மாற்­றப்­படும் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

கடந்த சில ஆண்­டு­க­ளாக அந்த ஆட­வ­ரின் மாத வரு­மா­னம் ஏறக்­கு­றைய $2,000 என்று மதிப்­பி­டப்­பட்­டது.

அதை­ய­டுத்து, நான்கு ஆண்­டு­க­ளுக்கு மாதம் $300ஐ முன்­னாள் மனை­விக்­குக் கொடுக்­கு­மாறு ஆட­வ­ருக்கு நீதி­பதி உத்­த­ர­விட்­டார்.

12, 17 வயது நிரம்­பிய அவர்­க­ளின் இரண்டு பிள்­ளை­க­ளுக்­காக அவர் தன் முன்­னாள் மனை­விக்கு மாதத்­திற்கு மேலும் $800 கொடுக்க வேண்­டும்.

2006ஆம் ஆண்டு திரு­ம­ணம் செய்­து­கொண்ட அத்­தம்­பதி, 2022ஆம் ஆண்­டில் மண­வி­லக்­குப் பெற நேரிட்­டது. பிள்­ளை­களைப் பரா­ம­ரிப்­ப­தன் தொடர்­பில் கூட்­டுப் பொறுப்பு ஏற்க அவர்­கள் ஒப்­புக்­கொண்­ட­னர்.

இருப்­பி­னும், திரு­ம­ண­மான பிறகு வாங்­கிய சொத்­து­க­ளைப் பிரிப்­பது, ஆட­வர் முன்­னாள் மனை­விக்­கும் தமது பிள்­ளை­களுக்­கும் பரா­ம­ரிப்­புக் கட்­ட­ணம் செலுத்­து­வது ஆகி­யவை தொடர்­பில் இரு­வ­ருக்­கும் இடையே கருத்து வேறு­பாடு ஏற்­பட்­டது.

இவ்­வ­ழக்­கில், ஆட­வ­ரின் மத்­திய சேம­நி­திக் கணக்கு, யுஓபி வங்­கிக் கணக்கு, திரு­ம­ணத்­திற்­குப் பிறகு இரு­வ­ரும் வாங்­கிய வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக வீடு ஆகி­யவை மட்­டுமே திரு­ம­ணச் சொத்­து­களில் அடங்­கி­ய­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

முன்­னாள் மனைவி முன்­ன­தாக, 30 ஆண்­டு­க­ளுக்கு மாதம் $900 என்ற அடிப்­ப­டை­யில் ஆட­வரி­ட­மி­ருந்து ஒட்­டு­மொத்­த­மாக $324,000 கோரி­யி­ருந்­தார்.

அது ஏற்­றுக்­கொள்­ள­மு­டி­யா­தது என்று நீதி­பதி கூறி­னார். அந்த மாது தனது உடல்­நிலை கார­ண­மா­கத் தன்­னால் பணி­புரிய முடி­யாது எனக் காட்­டும் ஆவ­ணங்­க­ளைச் சமர்ப்­பித்­தி­ருந்­தார். அவை இவ்­வாண்டு மார்ச் மாதம் காலா­வ­தி­யா­யின.

பிள்­ளை­க­ளுக்­காக மாதா­மாதம் $1,650 செல­விடு­வ­தாக மாது கூறி­னார். இருப்­பி­னும், $990 தகுந்த தொகை­யாக இருக்­கும் என்று நீதி­பதி தெரி­வித்­தார்.

நீதி­மன்­றத் தீர்ப்­புக்கு எதி­ராக அந்த மாது மேல்­மு­றை­யீடு செய்துள்­ளார்.