தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

லஞ்சம் தர முயன்ற வெளிநாட்டு ஊழியருக்குச் சிறைத்தண்டனை

1 mins read
61467211-773d-4157-a1eb-7c02647c640c
-

வியட்­னா­மைச் சேர்ந்த கேளிக்கை நிகழ்ச்­சிப் படைப்­பா­ளர் ஒரு­வர் விதி­மீ­ற­லாக மது­பானக் கூடத்­தில் வேலை­பார்த்­த­போது அம­லாக்க நட­வ­டிக்கை மேற்­கொண்ட காவல்­துறை அதி­கா­ரி­க­ளி­டம் பிடி­பட்­டார்.

அதை­ய­டுத்து, 21 வயது டாங் மய் ஹுயென் டிராங், காவல்­துறை அதி­கா­ரிக்கு $100 கையூட்டு தர முயன்­ற­தா­கக் கூறப்­பட்­டது.

சென்ற ஆண்டு நவம்­பர் 5ஆம் தேதி நடந்த சம்­ப­வத்­தில் 24 வயது காவல்­துறை அதி­காரி லஞ்­சத்­தைப் பெற்­றுக்­கொள்ள மறுத்­து­விட்­டார். டிராங் பின்­னர் கைது செய்­யப்­பட்­டார்.

லஞ்­சம் தர முயன்­ற­தன் தொடர்­பில் சுமத்­தப்­பட்ட குற்றச்­சாட்டை நேற்று ஒப்­புக்­கொண்­ட­தைத் தொடர்ந்து அவ­ருக்கு ஒரு­வா­ரச் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

மது­பா­னக் கூடத்­தில் அம­லாக்க நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­ட­போது யாரோ எழுப்­பிய எச்­ச­ரிக்­கைக் குர­லைக் கேட்டு டிராங்­கும் வேறு சில பெண்­களும் ஓடத் தொடங்­கி­னர்.

எனவே மூன்று அதி­கா­ரி­கள் அவர்­க­ளைத் துரத்­திச் செல்ல நேரிட்­டது.

வியட்­னா­மைச் சேர்ந்த மற்­றொரு பெண்­ணு­டன் பிடி­பட்ட டிராங் முத­லில் $50 தாளைத் தர முயன்­றார். அதி­காரி மறுக்­கவே மற்­றொரு $50 தாளை அவர் தர முயன்­றார்.

லஞ்­சம் தரு­வது தவறு என்று தனக்­குத் தெரி­யும் என விசா­ர­ணை­யில் டிராங் ஒப்­புக்­கொண்­ட­தாக நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது.