சிங்கப்பூரில் இந்த மாதத்தின் பிற்பாதியில் மழை பெய்யும் நாள்கள் குறைவாகவே இருக்கும். வெப்பமான நாள்கள்தான் மிகுந்து இருக்கும்.
அன்றாட வெப்பநிலை 34 டிகிரி செல்சியசை ஒட்டியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு சில நாள்களில் மேகம் குறைந்து வெப்பநிலை 35 டிகிரி செல்சியசை தொடலாம் என்று சிங்கப்பூர் வானிலை ஆய்வு நிலையம் நேற்று தெரிவித்தது.
சில நாள்களில் இரவு நேரங்களில்கூட வெப்பம் அதிகமாக, அதாவது 29 டிகிரி செல்சியஸ் அளவுக்கு இருக்கக்கூடும்.
இந்த மாதத்தின் முதல் பாதியுடன் ஒப்பிடுகையில் இரண்டாவது பாதியில் சராசரி மழை அளவு குறைவாகவே இருக்கும்.
சில நாட்களில் பிற்பகல் நேரத்திலும் அதிகாலை நேரத்திலும் இடியுடன் கொஞ்ச நேரத்திற்கு மழை பெய்யலாம். ஒரு சில நாட்களில் காலைநேரத்திலும் மழை இருக்கும் என்று அந்த நிலையம் முன்னுரைத்து இருக்கிறது.
மொத்தமாகப் பார்க்கையில் இந்த மாதத்தின் இரண்டாவது பாதியில் சராசரி மழை அளவு குறைவாகவே இருக்கும் என்று நிலையம் தெரிவித்துள்ளது.
இம்மாதத்தின் முதல் இரண்டு வாரங்களின்போது ஜூன் 2ஆம் தேதி புலாவ் உபினில் அதிக பட்சமாக 34.7 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவியது.

