வெளிநாடு செல்லும் முன் ரத்த நன்கொடை தருக

வெளிநாடு செல்லும் முன் ரத்த நன்கொடை தருக

2 mins read
c05fb81a-1aec-4cec-9263-9624f6ba89c1
-

ஓ பிளஸ், ஓ மைனஸ், ஏபி மைனஸ் வகை ரத்த இருப்பு குறைவு

சிங்­கப்­பூ­ரில் பல வகை ரத்த சேமிப்பு இருப்பு குறைந்து வரு­கிறது. இந்த நிலை­யில், விடு­முறைக் காலத்­தில் வெளி­நாடு செல்­வ­தற்கு முன்­பாக ரத்த நன்­கொடை செய்­யும்­படி மக்­க­ளுக்குச் சுகா­தார அறி­வி­யல் ஆணை­யம் வேண்­டு­கோள் விடுக்­கிறது.

ஓ பிளஸ், ஓ மைனஸ், ஏபி மைனஸ் ஆகிய வகை ரத்த இருப்பு குறைந்­து­விட்­ட­தாக சிங்­கப்­பூர் செஞ்­சி­லு­வைச் சங்க இணை­யத்­த­ளம் தெரி­விக்­கிறது.

ஓ பிளஸ் வகை ரத்­தம்தான் மிகக் குறை­வாக இருப்­பில் உள்­ளது என்­பதை அது சுட்­டி­யது.

ரத்­த இருப்பு நான்கு வகை­களா­கப் பிரிக்­கப்­ப­டு­கிறது. போதிய அளவு, மிதம், குறைவு, மிகக் குறைவு ஆகி­யவை அந்த நான்கு வகை­க­ளா­கும்.

ஏ பிளஸ், ஏ மைனஸ், பி பிளஸ் ஆகிய வகை ரத்த இருப்பு மித­மாக உள்­ளது. நீண்ட வார முடிவு நாள்­க­ளின்­போ­தும் பள்ளி விடு­முறை நாள்­களின்போதும் ரத்த நன்­கொடை பொது­வா­கவே 20% குறை­வாக இருக்­கும் என்று ஆணை­யம் குறிப்­பி­டு­கிறது.

அந்த விடு­முறையில் ­கொடை­யா­ளர்­கள் வெளி­நாடு செல்ல முயல்­வதே அதற்­கான கார­ணம்.

சில நாடு­க­ளுக்கு அல்­லது சில நாடு­களில் சில பகு­தி­களுக்­குச் சென்று வரு­வோர் ரத்த நன்­கொடை வழங்க முடி­யா­மல் போய்­வி­டக்­கூ­டும். கார­ணம் அந்த நாடு­களில் இருந்­த­போது மக்­க­ளுக்குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்டு இருக்­க­லாம்.

ஜூன் விடு­முறை காலத்­தில் அதி­க­மான சிங்­கப்­பூ­ரர்­கள் வெளி­நாடு செல்­வார்­கள். அவர்­கள் திரும்பி வரும்­போது ரத்த நன்­கொடை வழங்க முடி­யா­மல் போக­லாம்.

ஆகை­யால், வெளி­நா­டு­க­ளுக்­குப் புறப்­ப­டு­வ­தற்கு முன்­பா­கவே ரத்த நன்­கொடை வழங்கி ரத்த இருப்பை உறு­திப்­ப­டுத்­தும்­படி ஆணை­யம் பொது­மக்­க­ளுக்கு வேண்­டு­கோள் விடுத்­துள்­ளது.

எந்த வகை ரத்­தத்­தைக் கொண்­டி­ருப்­போ­ருக்­கும் அவ­ச­ர­கா­லத்­தில் ஓ வகை ரத்­தத்­தைப் பயன்­ப­டுத்த முடி­யும். இந்த வகை ரத்­தத்­திற்குத் தேவை எப்­போ­துமே அதி­க­மாக இருக்­கும். ஆகை­யால், இதன் இருப்பு எப்­போ­துமே நிலை­யாக இருக்­காது.

மருத்­து­வ­ம­னை­க­ளின் தேவை­யைப் பூர்த்தி செய்­யும் அள­வுக்கு ரத்தக் கையி­ருப்பு இருந்­த­தில்லை என்­பதைச் சுட்­டிய ஆணை­யம், நீண்ட வாரமுடிவு விடு­முறை வந் ததால் ரத்தக் கையி­ருப்பு மிக­வும் குறைந்­து­விட்­ட­தாகக் கூறியது.