தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஸ்ரீ நாராயண மிஷன் 75 ஆண்டு நிறைவு விழா

1 mins read
0877213e-bcc4-4a02-8fb1-316b0ac96733
-

ஸ்ரீ நாராயண மிஷன் அதன் 75ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு ஜூன் 17, 18ஆம் தேதிகளில் வரலாற்றுக் கண்காட்சி ஒன்றை இந்திய மரபுடைமை நிலையத்தில் நடத்தும். ஸ்ரீ நாராயண மி‌‌ஷன் அமைப்பின் வரலாற்றுத் தகவல்களுடன் அடுத்த ஐந்து ஆண்டுகளில் அதன் வளர்ச்சிக்கான திட்டங்களும் முயற்சிகளும் இந்த கண்காட்சியில் இடம்பெறும்.

ஜாலான் புசார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் குமாரி டெனிஸ் புவா ஜூன் 17ஆம் தேதி அன்றும், மூத்த நாடாளுமன்றச் செயலாளர், கலாசார, சமூக, இளையர் அமைச்சு, சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சரான திரு எரிக் சுவா ஜூன் 18ஆம் தேதி அன்றும் சிறப்பு விருந்தினர்களாக நிகழ்வில் கலந்துகொள்வார்கள்.

இரு நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கண்காட்சி நடைபெறும்.

ஸ்ரீ நாராயண மிஷன் கண்ணோட்டத்தில் தொண்டூழியம் குறித்த கலந்துரையாடலும் சிங்கப்பூர் அறப்பணிச் சூழலை ஆராய்வதுடன் அதில் ஸ்ரீ நாராயணன் மிஷனின் பங்கை விவரிக்கும் கலந்துரையாடலும் இந்த நிகழ்வில் இடம்பெறும்.

இந்த அங்கங்கள் குறிப்பிட்ட அளவு பங்கேற்பாளர்களையே கொள்ளும் என்பதால் முதலில் வருவோருக்கே முன்னுரிமை வழங்கப்படும்.