மனநிறைவு: சமூகச் சேவைத் துறையில் சேர்வோர் அதிகம்

2 mins read
771282de-45b5-4267-b85e-090d21fa27ee
-

சிங்­கப்­பூ­ரில் தாங்­கள் பார்த்து வந்த வேலை­யை­ நடுவே விட்டு விட்டு சமூ­க சேவைத் தொழில்­து­றை­யில் வேலை­யில் சேர்­வோர் எண்­ணிக்கை இப்­போது அதி­க­மாக இருக்­கிறது.

அப்­படி நடுவே வாழ்க்­கைத் தொழிலை மாற்­றிக்­கொண்­ட­வர்­களின் எண்­ணிக்கை கடந்த 2016 முதல் 2022 வரை 19 விழுக்­காடு கூடி­யி­ருப்­ப­தாக தேசிய சமூ­கச் சேவை மன்­றம் தெரி­வித்­துள்­ளது.

இடை­யில் சமூக சேவைத் துறை­யில் தன்­னு­டைய வாழ்க்­கைத்தொழிலை மாற்­றிக்­கொண்­ட­வர்­களில் திரு பிரேம் முனி­யாண்டி, 37, என்­ப­வர் ஒரு­வர்.

இவர், 2010ஆம் ஆண்டு கண் சோத­னை­யா­ள­ராக பட்­ட­யம் பெற்­ற­வர். அந்த வேலை தன் விருப்­பத்­திற்­கேற்ற வாழ்க்­கைத்­தொ­ழில்­தான் என்று அவர் முடிவு செய்­தி­ருந்­தார்.

ஆனால், அந்­தத் தொழில்­துறை­யில் சில ஆண்­டு­கள் வேலை பார்த்த பிறகு தன்­னி­டம் ஊக்­கம் குறைந்­ததை அவர் கண்­டு­கொண்­டார்.

"எனக்கு மட்­டு­மன்றி மற்­ற­வர்­களுக்­கும் ஏதா­வது செய்ய வேண்­டும் என்று என்­னுள் இருந்த விருப்­பத்தை நான் கண்­டு­கொண்­டேன்," என்று தெரி­வித்த திரு பிரேம், 2018ல் விலங்­கு­வதை தடுப்­புச் சங்­கத்­தில் தொண்­டூழி­யம் செய்­யத் தொடங்­கி­னார்.

சமூ­கத்­திற்­குச் சேவை­யாற்று­வ­தில் அவர் மகிழ்ந்­தார். தன்­ வாழ்க்கை பொருள்­பொதிந்த ஒன்­றாக இருப்­பதை அவர் கண்டு­கொண்­டார்.

"மற்றவருக்கு உதவி செய்­யக்­கூ­டிய வேலை­யில் இருக்க வேண்­டும் என்­பதே எனது விருப்­பம். ஆனால் அதற்­கான சில தேர்ச்­சி­களும் அறி­வும் என்­னி­டம் இல்லை. அது எனக்கு கவ­லை­யாக இருந்­தது.

"சமூக ஊழி­யர்­க­ளுக்­கான ஒர்க்­ஃபோர்ஸ் சிங்­கப்­பூர் வாழ்க்­கைத்தொழில் மாற்­றுச் செயல்­திட்­டத்­தில் சேர்ந்­தேன்," என்று அவர் தெரிவித்தார்.

அந்­தச் செயல்­திட்­டம் நடு­வில் வேலை வாழ்க்­கைத்தொழிலை மேற்­கொள்­வோ­ருக்­குப் பயிற்சி அளித்து அவர்­களைத் தகு­தி­யுள்ள சமூக ஊழி­யர்­க­ளாக ஆக்கு­கிறது. அதன் ஒரு பகு­தி­யாக திரு பிரேம் சமூ­கச் சேவை­யில் இரண்­டாண்டு பட்­ட­யப் படிப்­பில் சேர்ந்­தார்.

இப்­போது அவர் சிண்டா எனப்­படும் சிங்­கப்­பூர் இந்­தி­யர் மேம்­பாட்­டுச் சங்­கத்­தில் முழு­நேர சமூக ஊழி­ய­ராக உள்ளார்.