தீ: மருத்­து­வ­ம­னை­யில் மூவர்

தீ: மருத்­து­வ­ம­னை­யில் மூவர்

1 mins read
3344cd74-a7b6-4fe2-8bbd-c50221a1f1dc
-

புக்­கிட் பாத்­தோக் வீவக வீடு ஒன்­றில் நேற்று காலை நிகழ்ந்த தீச்சம்­ப­வத்­தில் மூவர் மருத்­து­வ­ம­னைக்குக் கொண்டு செல்­லப்­பட்­ட­னர். 70 குடி­யி­ருப்­பா­ளர்­கள் அந்­தக் குடி­யி­ருப்­பில் இருந்து வெளி­யேற்­றப்­பட்­ட­னர்.

சீன நாளி­த­ழான லியன்ஹ சாவ்­ பா­வில் வெளி­வந்த புகைப்­படங்­களில், சம்­பவ இடத்­தில் மூன்று தீய­ணைப்பு வாக­னங்­கள், இரண்டு அவ­சர மருத்­துவ வாக­னங்­கள், ஒரு காவல்­துறை வாக­னம் ஆகி­யவை தெரிந்­தன.

இதுபற்­றிக் கூறிய சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை, புக்­கிட் பாத்­தோக் அவென்யூ 5ல் உள்ள புளோக் 392ல் தீ ஏற்­பட்­ட­தாக வெள்­ளிக்­கிழமை அதி­காலை சுமார் 3.45 மணிக் குத் தக­வல் கிடைத்­த­தா­கத் தெரி­வித்­தது.

வீட்­டின் மைய அறை­யில் இருந்த பொருள்க­ளால் தீ மூண்ட­தா­க­வும் நீர் பீய்ச்­சி­யடித்து தீ அணைக்­கப்­பட்­ட­தா­க­வும் அது தெரி­வித்­தது. தீச்­சம்­ப­வத்­துக்­கான காரணம் குறித்து விசா­ரணை நடை­பெ­று­வ­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.