தாக்குதல்; எலும்பு முறிந்தது

1 mins read
d7269bf5-1891-411d-819e-8cd18f46352a
-

பாது­காப்பு இல்­லம் ஒன்­றில் 20 வயது மாது ஒரு­வர் 17 வய­துப் பெண் மீது நடத்­திய தாக்குதலில் அந்­தப் பெண்ணுக்கு மூக்­கில் எலும்பு முறிவு ஏற்­பட்­டுள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

அந்த 20 வயது மாது, பதின்ம வய­துப் பெண்­ணின் தலை­மு­டியைப் பிடித்து அவர் தலை­யைப் பல முறை தரை­யில் மோதி­ய­தா­கத் தெரி­விக்­கப்­ப­டு­கிறது. தாக்­கு­தல் கிட்­டத்­தட்ட நான்கு நிமி­டங்­கள் நீடித்­த­தா­கத் தெரி­கிறது.

இதில் பதின்ம வய­துப் பெண்­ணின் தலை­முடி கொத்து கொத்­தாக தலை­யி­லி­ருந்து வெளி­வந்­த­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

பாது­காப்பு இல்ல ஊழி­யர் வந்து தாக்­கப்­பட்ட பதின்ம வய­துப் பெண்ணை மீட்ட பின்­னரே தாக்­கு­தல் நிறுத்­தப்­பட்­ட­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கிறது.

நீதி­மன்ற உத்­த­ர­வுப்­படி தாக்­கு­த­லில் ஈடு­பட்ட மாது தாக்­கப்­பட்ட பெண் ஆகி­யோர் பற்றிய விவ­ரங்­களை வெளி­யிட முடி­யாது. இந்­தத் தாக்­கு­தல் இவ்­வாண்டு ஜன­வரி மாதம் 22ஆம் தேதி காலை சுமார் 9.20 மணிக்கு நிகழ்ந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

மாது, பதின்ம வய­துப் பெண் இரு­வ­ருக்­கி­டையே வாக்­கு­வாதம் ஏற்­பட்­ட­தைத் தொடர்ந்து மாது அந்­தப் பெண்ணை தாக்­கி­ய­தா­கத் தெரி­கிறது.

அவரை முத­லில் கையால் தாக்­கி­யும் காலால் உதைக்­கவும் தொடங்­கிய மாது பின்­னர் அவர் தலை­மு­டி­யைப் பிடித்து அவ­ரைத் தரை­யில் மோதி­ய­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

நேற்று நீதி­மன்­றத்­தில் முன்­னி­லை­யான மாது தமது குற்றத்தை ஒப்­புக்­கொண்­டார்.

கண்­கா­ணிப்பு ஆணை, சீர்­திருத்­தப் பயிற்­சிக்கு அந்த மாது தகு­தி­யு­டை­ய­வரா என்­பதைத் தீர்­மா­னிக்க நீதி­மன்­றம் அது குறித்த அறிக்­கையை சமர்ப்­பிக்­கு­மாறு உத்­த­ர­விட்­டு உள்­ளது.