ஊக்கமும் உற்பத்தித்திறனும் பெருக மனநலன் மிக முக்கியம்

முரசொலி

உரு­வம் இல்லை என்­றா­லும் நம்மை எல்­லாம் ஆட்­டு­விப்­பது மனம்­தான். உடல் நல­னைப் போலவே மன­ந­ல­னும் நமக்கு மிக முக்­கி­ய­மா­னது. உடல் நல­னில் கோளாறு வந்­தால், பிரச்­சினை ஏற்­பட்­டால் மருத்­து­வரை நாடு­வது வழக்­கம்.

ஆனால், மன­ந­ல­னில் ஏதா­வது பிரச்­சினை, கோளாறு ஏற்­படும்போது பொது­வா­கவே அதைப் பல­ரும் அலட்­சி­யப்­ப­டுத்­தி­ வி­டு­கி­றார்­கள். மன­நலம் சரி­யில்­லாத ஒரு­வரைச் சமூ­கம் வேறு மாதி­ரி­யாகப் பார்க்­கும் என்ற எண்­ணம் நெடுங்­கா­ல­மாக மக்­கள் மன­தில் ஊறி வந்­தி­ருப்­பதே இதற்­கான கார­ணம்.

இருந்­தா­லும் இப்­போது காலம் மாறி­விட்­டது. நாம் வளர்ந்த சமூ­க­மாக, பக்­கு­வப்­பட்­ட­வர்­க­ளாக, மன­மு­திர்ச்­சி­ய­டைந்த சமூ­க­மாக மாறி­விட்­டோம். இந்­தச் சூழ­லில் மன­ந­லம் என்­பது மனம் விட்டு வெளிப்­ப­டை­யா­கப் பேசக்­கூ­டி­ய­தாக இருக்க வேண்­டும்.

இதில் இனி ஒளி­வு­ம­றை­வுக்கே வேலை இல்லை. ஒரு நாட்­டின் மக்­க­ளுக்கு மன­ந­லம் எந்த அள­வுக்கு முக்­கி­யம் என்­பதை எடுத்­துச் சொல்ல வேண்­டிய அவ­சி­யம் இல்லை.

சிங்­கப்­பூ­ரில் மக்­க­ளி­டையே மன­ந­லம் எப்­படி இருக்­கிறது என்­ப­தைக் கண்­ட­றிய அண்­மை­யில் ஆய்வு ஒன்று நடத்­தப்­பட்­டது.

டியூக் என்­யு­எஸ் மருத்­து­வப் பள்­ளி­யும் மன­நலக் கழ­க­மும் நடத்­திய அந்த ஆய்வு மூலம் முக்­கி­ய­மான ஒரு நில­வ­ரம் தெரி­ய­வந்து இருக்­கிறது.

அதா­வது சிங்­கப்­பூரைப் பொறுத்­த­வ­ரை­யில் மன­ந­லம் என்­பது உட­ன­டி­யா­கக் கவ­னிக்­கப்­பட வேண்­டிய ஒரு பிரச்­சினை என்­பதை அந்த ஆய்வு எடுத்துக்காட்டி இருக்­கிறது.

கொவிட்-19க்குப் பிறகு மக்­க­ளி­டையே மன­நலம் எப்­படி என்­ப­தைக் கண்­ட­றி­யும் நோக்­கத்­தில் சென்ற ஆண்டு ஏப்­ரல் முதல் ஜூன் வரை­யில் நடத்­தப்­பட்ட அந்த ஆய்­வில் 21 வய­துக்கு மேற்­பட்ட 5,725 சிங்­கப்­பூ­ரர்­கள் உள்­ள­டக்­கப்­பட்­ட­னர்.

மக்­க­ளி­டையே மனச்­சோர்­வும் கவலை, பதற்­ற­மும் நில­வு­கின்­றன. அதன் கார­ண­மாக ஆண்டு ஒன்­றுக்கு ஏறக்­கு­றைய 16 பில்­லி­யன் வெள்ளி இழப்பு ஏற்­ப­டக்­கூ­டும். இந்த இழப்பு நாட்­டின் மொத்த உள்­நாட்டு உற்­பத்­தி­யில் சுமார் 2.9% என்­பதை எல்லாம் ஆய்வு வெளிப்படுத்தியது.

மனச்­சோர்வு, கவலை, பதற்­றம், பட­ப­டப்பு கார­ண­மாக வேலைக்குச் செல்­லா­மல் மட்­டம்­போ­டும் போக்கு ஏற்­ப­டு­கிறது. உற்­பத்­தித்­தி­றன் குறை­கிறது. சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு வச­தி­களை அதி­கம் பயன்­ப­டுத்­திக்­கொள்ள வேண்­டிய தேவை ஏற்­ப­டு­கிறது.

கொவிட்-19 கிரு­மித்­தொற்று கார­ண­மாக படு­மோ­ச­மான பிரச்­சி­னை­கள் ஆண்­டுக் கணக்­கில் ஏற்­பட்டு அத­னால் மக்­கள் மன­ந­லன் பாதிக்­கப்­பட்­டது உண்­மை­தான். ஆனால், சிங்­கப்­பூரைப் பொறுத்­த­வ­ரை ­இ­தில் வேறு ஓர் அம்­சம் மேலும் கவலை தரு­வ­தாக உள்­ளது.

மன­உ­ளைச்­ச­லுக்கு உட்­பட்டு இருந்த கால­கட்­டத்­திற்­குப் பிறகு அதில் இருந்து மீண்டு வந்த தேசிய மீட்சி அள­வைப் பார்க்­கை­யில் சிறந்த பலன் ஏற்­பட்டு இருப்­ப­தா­கத் தெரி­ய­வில்லை என்­கிறது ஆய்வு.

உடன்­ந­ல­னுக்­குப் பாதிப்பு வந்­தால், நோய் ஏற்­பட்­டால் எப்­படி உட­ன­டி­யாகச் சிகிச்­சையை நாடு­கி­றோமோ அதே­போல மனப் பிரச்­சி­னை­களும் கையா­ளப்­பட வேண்­டும் என்­பதை அந்த ஆய்வு பாட­மாக நமக்­குப் போதிக்­கிறது.

சிங்­கப்­பூ­ரின் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புச் சேவை­கள் உல­கத்­த­ரம் வாய்ந்­தவை. அர­சாங்க, தனி­யார் மருத்­து­வ­ம­னை­களும் பல­துறை மருந்­த­கங்­கள், தனி­யார் மருத்­து­வர்­கள், சிறப்பு வல்­லு­நர்­கள் உள்ளிட்ட அனை­வ­ரும் மக்­க­ளின் உடல்­ந­ல­னுக்கு, நல்­வாழ்­விற்கு ஆற்­றும் சேவை­கள் உல­க­ள­வில் முதல் தர­மா­னவை.

அதே­போல, மன­ந­லக் கழ­க­மும் தனி­யார் அமைப்­பு­களும் குடி­மைச் சமூக அமைப்­பு­களும் மக்­க­ளின் மன­ந­ல­னில் கவ­னம் செலுத்தி அதைப் பாது­காக்கப் போரா­டு­கின்­றன.

மன­ந­லப் பிரச்­சினை நமக்கு இருந்­தால், அது வெளியே தெரிந்­தால் நம்மை மற்­ற­வர்­கள் தாழ்­வாக நினைப்­பார்­கள் என்ற மனப்­போக்கு இன்­ன­மும் நில­வு­வ­தால் பல­ரும் முன்­ன­தா­கவே உரிய சிகிச்­சையை நாடி மன­ந­லப் பிரச்­சி­னையைத் தவிர்த்­துக்­கொள்ள முயல்­வ­தில்லை.

பல வாய்ப்பு வச­தி­கள் இருந்­தும் அவற்­றைப் பயன்­ப­டுத்­திக்­கொள்­ளா­மல் சிலர் மவு­ன­மா­கவே இருந்து விடு­கி­றார்­கள்.

தங்­க­ளுக்கு மன­ந­லப் பிரச்­சினை இருப்­பது தெரிந்­தும் அதற்குத் தீர்வு காணா­மல் ஒதுங்கி­வி­டு­ப­வர்­களும் உண்டு. இந்­தப் போக்­கு­கள் தேவை­யில்­லா­தவை.

உடல்­ந­லன் மட்­டும் போதாது. மன­ந­ல­னும் முக்­கி­யம். இரு நலன்­க­ளும்­தான் முழு நலம் என்­பதை மக்­கள் புரிந்­து­கொள்ள வேண்­டும்.

நிறு­வ­னங்­க­ளைப் பொறுத்­த­வரை ஊழி­யரின் மன­ந­ல­னும் உற்­சா­க­மும் மிக முக்­கி­ய­மா­னவை. தொழி­லா­ளர்­க­ளின் மன­உ­ளைச்­சல்­களை, நெருக்­க­டி­க­ளைப் புரிந்­து­கொண்டு அவர்­க­ளி­டம் கரு­ணை­யு­டன் நடந்­து­கொண்டு ஊழி­யர்­க­ளைச் செம்­மை­யா­கக் கையா­ளும் நிறு­வ­னங்­கள், ஊக்­க­மிக்க உயர்­தர ஊழி­யர்­க­ளைக் கொண்­டி­ருக்­கும் என்­ப­தில் ஐய­மில்லை.

அப்­ப­டிப்­பட்ட ஒரு சூழ­லில் மனப் பிரச்­சி­னை­களை எதிர்­நோக்­கும் ஊழி­யர்­கள், தாங்­க­ளா­கவே முன்­ன­தா­கவே முன்­வந்து உதவி நாடு­வார்­கள்.

சிங்­கப்­பூ­ரில் ஊழி­யர்­க­ளின் மன­ந­லப் பிரச்­சினை­க­ளுக்கு உத­வும் முயற்­சி­களை நிறு­வ­னங்­கள் முடுக்­கி­விட்டு வரு­கின்­றன.

காப்­பு­றுதித் திட்­டங்­களில் மன­நல நன்­மை­களை­யும் உள்­ள­டக்­கும் நிறு­வ­னங்­கள் முன்­பை­விட இப்­போது அதி­கம். இது வர­வேற்­கத்­தக்க ஒரு நில­வ­ரம்.

மனச்­சோர்வு, கவலை, பதற்­றம் போன்­றவை எல்­லாம் உற்­பத்­தித்­தி­றனைப் பெரி­தும் பாதிக்­கக்­கூ­டி­யவை என்­பதை நாம் எப்­போ­தும் நினை­வில் கொள்ள வேண்­டும்.

மனதள­வில் பாதிப்பு உள்­ளோ­ருக்குக் கைகொடுத்து உதவ நாம் எப்­போ­தும் தயா­ராக இருக்க வேண்­டும்.

குடும்­பத்­தி­ன­ரும் பல்­வேறு அமைப்­பு­களும் பரா­ம­ரிப்­புச் சேவை அமைப்­பு­களும் நிறு­வ­னங்­களும் ஒன்று சேர்ந்து செயல்­பட்­டால் இதில் நாம் விரும்­பிய பலனை அடை­ய­லாம் என்பது திண்ணம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!