தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சொந்த ஊரில் வினோத்குமார் நல்லுடல்

2 mins read
4602f395-be60-4604-bbf9-8036714b1449
-

மோன­லிசா

தஞ்­சோங் பகார் கட்­ட­டம் இடிந்த விபத்­தில் உயி­ரி­ழந்த வினோத்­குமார் திருப்­ப­தி­யின் நல்­லு­டல் நேற்று இரவு 10.30 மணி­ய­ள­வில் ஏர் இந்­தியா விமா­னத்­தின் மூலம் இந்­தி­யா­விற்­குக் கொண்­டு­செல்­லப்­பட்­டது.

வினோத்­கு­மா­ரின் பாட்­டி­யின் இளைய சகோ­த­ர­ரான ராஜ­மாணிக்­கம் திருப்­ப­தி­யும், 44, தாய்­மா­மன் கார்த்­திக் சாமு­டி­யும், 29, உடன் சென்­றுள்­ள­னர்.

சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து திருச்சி வரை விமா­னத்­தி­லும் அதன் பின் அங்­கி­ருந்து சொந்த ஊருக்கு மருத்­துவ அவ­சர ஊர்தி வழி­யா­க­வும் அவ­ரின் நல்­லு­டல் எடுத்­துச்­செல்­லப்­பட்­டது.

இதற்­கான ஏற்­பா­டு­க­ளை­ வினோத்­கு­மார் பணி­பு­ரிந்த 'அய்க் சன் டிமோ­லி­ஷன் அண்ட் இன்­ஜி­னி­ய­ரிங்' நிறு­வ­னம் செய்­துள்­ளது.

வினோத்­கு­மார், சிறு­வ­ய­து­முதலே தன்­ தாயா­ரின் சொந்த ஊரான தமிழ்­நாட்­டின் திருப்­பத்­தூர் மாவட்­டத்­தி­லுள்ள நாட்­ட­றம்­பள்ளி கிரா­மத்­தில் பெற்றோர், தம்பி, உற­வி­னருடன் வளர்ந்தவர்.

சம்­ப­வம் நிகழ்ந்ததும் ஜூன் 15ஆம் தேதி சிங்­கப்­பூர் நேரப்­படி பின்னிரவு 2 மணி­ய­ள­வில் குடும்­பத்­திற்­குத் தக­வல் தெரி­விக்­கப்­பட்டதும் உற­வி­னர்­கள், நண்­பர்­கள், கிராமத்தினர் பலரும் நாட்­ட­றம்­பள்ளி வீட்­டில் கூடி­னர்.

குடும்ப வழக்­கப்­படி வினோத்­கு­மா­ரின் தந்­தை­யின் பூர்­வீக ஊரான வாணி­யம்­பா­டி­யில் உள்ள வீரா­ண­மலை கிரா­மத்­தில் இறு­திச் சடங்­கு­களைச் செய்ய குடும்­பத்­தி­னர் முடி­வு­செய்­துள்­ள­தாக கார்த்­திக் சாமுடி தெரி­வித்­தார்.

இதற்­கான ஏற்­பா­டு­களை குடும்­பத்­தார் கவ­னித்து வரு­வ­தா­க­வும் குறிப்­பிட்ட அவர், பல கன­வு­க­ளு­டன் சிங்­கப்­பூர் வந்த வினோத்தை இப்­படி சவப்­பெட்­டி­யில் திருப்பிச் சொந்த ஊருக்கு அழைத்­துச்­செல்­வேன் என்று கன­வி­லும்கூட நினைக்­க­வில்லை என்று கூறி கண்­ணீர் வடித்­தார்.

வினோத்­கு­மார் பணி­பு­ரிந்த நிறு­வ­னம் இப்போதைய செல­வு­களுக்­கும் இதர தேவை­க­ளுக்­கும் $10,000 அளித்­துள்­ள­தாக ராஜ­மாணிக்­கம் கூறி­னார். காப்­பீட்­டுத் தொகை பற்­றிய விவ­ரங்­கள் இனி­மேல் நிறு­வ­னத்­து­டன் கலந்­து­பேசி முடி­வெ­டுக்­கப்­படும் என்­றாரவர்.