முஃப்தி: சிங்கப்பூரில் ஹஜ்ஜுப் பெருநாள் ஜூன் 29ஆம் தேதியன்று கொண்டாடப்படும்

முஃப்தி: சிங்கப்பூரில் ஹஜ்ஜுப் பெருநாள் ஜூன் 29ஆம் தேதியன்று கொண்டாடப்படும்

1 mins read
ccdecd4b-6952-457d-9ac7-f02a55cfda7a
சென்ற ஆண்டு ஹஜ்ஜுப் பெருநாளையொட்டி யூசோஃப் இஷாக் பள்ளிவாசலில் நடைபெற்ற கூட்டுப் பிரார்த்தனை. கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் உள்ள முஸ்லிம்கள் இவ்வாண்டின் ஹஜ்ஜுப் பெருநாளை ஜூன் மாதம் 29ஆம் தேதியன்று கொண்டாடுவர்.

சிங்கப்பூரின் ஆக உயரியப் பதவியில் இருக்கும் இஸ்லாமிய சமய குருவான முஃப்தி நஸிருதீன் முகம்மது நாசர் அறிக்கை ஒன்றின் மூலம் இவ்வாறு அறிவித்துள்ளார்.

"தொடர்ந்து நல்ல செயல்களை மேற்கொள்வதோடு ஹஜ்ஜுப் புனிதப் பயணம் மேற்கொள்வோரின் நலனுக்காகப் பிரார்த்தனை செய்து இம்மாதத்தை வரவேற்போம்," என்று முஃப்தி குறிப்பிட்டார்.

சிங்கப்பூரைச் சேர்ந்த சுமார் 900 முஸ்லிம்கள் இவ்வாண்டு ஹஜ்ஜுப் புனிதப் பயணம் மேற்கொள்கின்றனர்.