'துவாஸ் டிவி வோர்ல்'டின் எஞ்சிய பகுதிகள் இடிக்கப்படும்

'துவாஸ் டிவி வோர்ல்'டின் எஞ்சிய பகுதிகள் இடிக்கப்படும்

2 mins read
98507220-412e-4ea4-b956-69bc895766a6
-

ஒரு காலத்தில் சிங்கப்பூரின் 'ஹாலிவுட்'டாக கருதப்பட்டது

ஒரு காலத்­தில் இந்த வட்­டா­ரத்­தி­லேயே ஆகப்­பெ­ரிய வெளிப்­புற தொலைக்­காட்சி அரங்­காக கருதப்­பட்டு வந்த 'துவாஸ் டிவி வோர்ல்ட்'டின் எஞ்­சிய பகுதி, 2024 இரண்­டாம் காலாண்­டிற்­குள் இடிக்­கப்­ப­ட­வுள்­ளது.

6.6 ஹெக்­டர் பரப்­ப­ள­வில் அமைந்த இந்த இடம், எட்டு 'செட்டு'களைக் கொண்­டி­ருந்­தது. அவற்­றில் ஐந்து செட்­டு­கள் பழைய சிங்­கப்­பூ­ரை­யும் மூன்று சீனா­வை­யும் சித்­தி­ரித்­தன.

ஏறக்­கு­றைய $35 மில்­லி­யன் செல­வில் 1990க்கும் 1992க்கும் இடையே சிங்­கப்­பூர் ஒளி­ப­ரப்­புக் கழ­கம் இந்த வளா­கத்­தைக் கட்­டி­யது.

சிங்­கப்­பூர் ஆற்­றைப்­போல காட்­டும் 215 மீட்­டர் நீள நீர் காட்சி­யை­யும் இந்த வளா­கம் கொண்­டி­ருந்­தது.

துவாஸ் சோத­னைச் சாவடி காம்­பி­ளெக்­சுக்­கும் நிலப் போக்கு­வ­ரத்து ஆணை­யத்­தின் எதிர்­வ­ரும் ஒருங்­கி­ணைந்த ரயில் சோதனை மையத்­துக்­கும் இடையே இந்த வளா­கம் அமைந்­துள்­ளது.

துவாஸ் டிவி வோர்ல்ட் கட்டி முடிக்­கப்­பட்­ட­போது, கேல்­டி­காட் ஹில்­லில் இருந்த ஆரம்­ப­கால சிங்­கப்­பூர் செட்­டை­விட 40 மடங்கு பெரி­ய­தாக இருக்­கும் என்று சிங்­கப்­பூர் ஒளி­ப­ரப்­புக் கழக பிர­தி­நி­தி­கள் 1990ல் கூறி­ இருந்­த­னர்.

இத­னால் கூடு­தல் நாட­கங்­களைத் தயா­ரிக்க முடிந்­தது. ஆங்­கி­லம், மலாய், தமிழ் நாட­கங்­கள் அவற்­றில் அடங்­கின.

பத்து ஆண்­டு­கால செயல்­பாட்­டிற்­குப் பிறகு, துவாஸ் டிவி வோர்ல்டை பரா­ம­ரிப்­ப­தற்கு செலவு அதி­க­மா­ன­தாக முன்­ன­தா­கத் தெரி­விக்­கப்­பட்டு இருந்­தது.

1990களுக்­குப் பிறகு குறை­வான பழங்­கால நாட­கங்­கள் தயா­ரிக்­கப்­பட்­டது அதற்­குக் கார­ணம்.

சிங்­கப்­பூர் காவல்­து­றை­யின் சிறப்பு செயல்­பாட்­டுத் தள­பத்­தியம் இந்த வளா­கத்தை வாட­கைக்கு எடுத்து, தனது பயிற்­சித் தேவை­க­ளைப் பூர்த்­தி­செய்ய அதைத் தற்­கா­லிக தளமாக மாற்­றி­யது என்று காவல்­துறை பேச்­சா­ளர் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சிடம் கடந்த வெள்­ளிக்­கி­ழமை கூறி­னார்.

இந்த வளா­கத்தை அர­சாங்­கத்­தி­டம் ஒப்­ப­டைக்க ஏதுவாக 2009ல் அங்கு பயிற்சி முடி­வுக்கு வந்­த­தாக அவர் சொன்­னார்.

துவாஸ் டிவி வோர்ல்­டின் ஏறக்­கு­றைய 100 கட்­ட­டங்­களில் 17 மட்­டுமே இப்­போது உள்­ளன. எஞ்சிய கட்­ட­டப் பகு­தி­கள் எப்போது நீக்­கப்­பட்­டன என்­பது பற்­றித் தெரி­ய­வில்லை.

செப்­டம்­பர் நடு­வில் ஒப்­பந்­த­தா­ரரை உள்­துறை அமைச்சு நிய­மிக்கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. அதை­ய­டுத்து, 2024 இரண்­டாம் காலாண்­டு­வரை இந்த வளா­கத்தை இடிக்­கும் பணி­கள் நடை­பெ­றும். பின்­னர் இந்த இடம் சிங்­கப்­பூர் நில ஆணை­யத்­தி­டம் ஒப்­ப­டைக்­கப்­படும்.