தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எஸ்பிஎச் மீடியா டிரஸ்டுக்கு தேசிய கொவிட்-19 விருது

1 mins read
c3335a1e-ae67-40a3-9952-34b23c4281cc
-

எஸ்­பி­எச் மீடியா டிரஸ்ட் (எஸ்­எம்டி) குழு­மத்­தின் ஆங்­கில, மலாய், தமிழ் ஊட­கப் பிரி­வும் சீன ஊட­கப் பிரி­வும் நேற்று அதி­ப­ரின் பாராட்­டுச் சான்­றி­தழை (கொவிட்-19) பெற்­றது.

ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்­தித்­தா­ளைச் சேர்ந்த தலை­மைப் புகைப்­ப­டக் கலை­ஞர் கெவின் லிம், 'எஸ்­எம்டி'யின் சார்­பில் அதி­பர் ஹலிமா யாக்­கோப்­பி­டம் இருந்து சான்­றி­த­ழைப் பெற்­றுக்­கொண்­டார்.

கொவிட்-19க்கு எதி­ரான சிங்­கப்­பூ­ரின் போராட்­டத்­தில் குறிப்­பி­டத்­தக்க தாக்­கத்தை ஏற்­படுத்திய அமைப்­பு­க­ளுக்கு இந்தச் சான்­றி­தழ் வழங்­கப்­ப­டு­கிறது.

ஐந்து விரு­துப் பிரி­வு­களில் 100க்கு மேற்­பட்ட தனி­ந­பர்­களுக்கும் 450க்கும் அதி­க­மான குழுக்­க­ளுக்­கும் அதி­பர் ஹலிமா தேசிய விரு­து­களை வழங்­கினார்.

பிர­த­மர் லீ சியன் லூங் உட்பட ஏறக்­கு­றைய 850 பேர் நிகழ்ச்­சி­யில் பங்­கேற்­ற­னர்.

அதி­ப­ரின் பாராட்­டுச் சான்­றி­த­ழு­டன் (கொவிட்-19), மெச்­சத்­த­குந்த சேவைப் பதக்­கம் (கொவிட்-19), பொதுச் சேவை நட்­சத்­தி­ரம் (கொவிட்-19), பொது நிர்­வா­கப் பதக்­கம் (தங்கம்) (கொவிட்-19), வீரப் பதக்­கம் (கொவிட்-19) ஆகிய விரு­து­களும் வழங்­கப்­பட்­டன.

ஆக உய­ரிய விரு­தான மெச்சத்­த­குந்த சேவைப் பதக்­கத்தை (கொவிட்-19) பெற்று மூவர் சிறப்­பிக்­கப்­பட்­ட­னர்.

சிங்­கப்­பூ­ரின் மருத்­துவ சேவைப் பிரிவு இயக்­கு­ந­ரான இணைப் பேரா­சி­ரி­யர் கென்­னத் மாக், உள்­துறை அமைச்­சின் நிரந்­த­ரச் செய­லா­ளர் பாங் கின் கியோங், பிஎஸ்ஏ இன்­டர்­நேஷனல் குழு­மத்­தின் தலைமை நிர்­வாகி டான் சோங் மெங் ஆகி­யோர் அந்த மூவர்.