ரயிலின் நம்பகத்தன்மையும் பராமரிப்புச் செலவுகளும் சமநிலை காணும் நிலையை எஸ்எம்ஆர்டி நெருங்கிவருவதாக நம்பிக்கை தெரிவித்துள்ளது.
அண்மை மாதங்களில் ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து, எஸ்எம்ஆர்டி தலைவர் சியா மூன் மிங்கிடம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பேசியது.
“உயர்செயல்திறனை கொடுக்கவிரும்புகிறோம். ஆனால் அதுதொடர்பான பராமரிப்புச் செலவுகளையும் கருத்தில்கொள்ள வேண்டும்’’ என்றார் 67 வயது சியா.
அரசாங்கம் வழங்கும் பணத்தில் ரயில் நம்பகத்தன்மையை அதிகரிக்க பராமரிப்புச் செலவுகளைக் கூட்டுவது சரியன்று என்றார் அவர்.
பராமரிப்புச்செலவுகள் குறையவும் கூடாது, அதே நேரம் கூடுதலாக இருக்கவும் கூடாது என்பதையும் திரு சியா சுட்டினார்.
தொழில்நுட்பத் தரவுகளைக் கொண்டு பராமரிப்புகளும் ரயில் பாகங்கள் எப்போது மாற்றப்படவேண்டும் என்பதையும் கண்டறிய முடிவதாக அவர் கூறினார்.
இதன் மூலம் குறைந்த செலவில் நன்பகத்தன்மை அதிகரிக்கப்படுவதாக திரு சியா தெரிவித்தார்.
சிங்கப்பூரில் இவ்வாண்டின் முதல் மூன்று மாதங்களில் 13 முறை ரயில் சேவைகளில் இடையூறு ஏற்பட்டது. அவற்றில் இரண்டு சம்பவங்களில் 30 நிமிடங்களுக்கு மேல் தாமதம் ஏற்பட்டது.