இரைச்சல் தொடர்பான புகார்களை விரைவாக விசாராணை செய்வதாக எஸ்எம்ஆர்டி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இரைச்சலைக் கண்காணிக்கும் கருவி மூலம் மூன்று நாள்களில் இடம்பெறும் விசாரணை இப்போது ஒரே நாளில் நடத்தப்படுகிறது.
அந்தக் கருவியை எஸ்எம்ஆர்டி நிறுவனமே சொந்தமாகத் தயாரித்தது.
தற்போது அந்தக் கருவிகள் வடக்கு-தெற்கு, கிழக்கு-மேற்கு, வட்டப்பாதைகளில் பொருத்தப்பட்டுள்ளன.
தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பாதையிலும் அக்கருவி பொருத்தப்படவுள்ளதாக எஸ்எம்ஆர்டி தெரிவித்தது.