விளையாட்டு மைதானத்தில் சிறுவர்கள் சிலரைக் கண்ட ஆடவர் ஒருவர், அவர்களை நோக்கி விளையாட்டுத்தனமாக பட்டாசு ஒன்றை வீசினார்.
புகையை வெளியேற்றிய பட்டாசு, சற்று நேரத்தில் வெடித்தது. இதனால் பீதியடைந்த அச்சிறுவர்கள், அங்கிருந்து ஓடினர்.
இந்நிலையில், பட்டாசை வெடிக்கச் செய்த குற்றத்தை திங்கட்கிழமை ஒப்புக்கொண்ட ரம்டான் புஜன், 49, என்பவருக்கு $3,500 அபராதம் விதிக்கப்பட்டது.
2022 ஜூலை 28ஆம் தேதி ஜூரோங்கில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக்கில் இச்சம்பவம் நிகழ்ந்தது. கட்டுமானத் துறையில் ஓட்டுநராக பணிபுரியும் அவர் அந்த புளோக்கில்தான் வசிக்கிறார்.
சம்பவம் நிகழ்ந்த இடத்தின் முகவரியோ அச்சிறுவர்களின் அடையாளங்களோ வெளியிடப்படவில்லை.