தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

செங்கல் கீழே விழுந்த சம்பவம் பற்றி நகர மன்றம் ஆராய்கிறது

1 mins read
a9b923e8-36cd-40b4-a0d6-ca74aa563da0
ஹவ்காங்கில் உள்ள வீவக குடியிருப்பு ஒன்றின் முகப்பிலிருந்து ஒரு செங்கல் கழன்று நான்கு மாடி கீழே நின்றிருந்த பிஎம்டபிள்யூ கார் ஒன்றின் உள்ளே போய் விழுந்ததாகக் கூறப்படுகிறது. - படம்: ஷின்மின் வாசகர்

அல்ஜுனிட்-ஹவ்காங் நகர மன்றம் மேலிருந்து கீழே கனமான ஒரு பொருள் விழுந்த சம்பவம் குறித்து ஆராய்ந்து வருகிறது.

அந்தச் சம்பவத்தின் விளைவாக சொகுசு கார் ஒன்றின் பின்பக்க கண்ணாடியில் ஓட்டை விழுந்துவிட்டது.

ஹவ்காங்கில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக் ஒன்றின் முகப்பிலிருந்து ஒரு செங்கல் கழன்று நான்கு மாடி கீழே நின்றிருந்த பிஎம்டபிள்யூ கார் ஒன்றின் உள்ளே போய் விழுந்ததாக ஷின் மின் நாளிதழ் திங்கள்கிழமை தெரிவித்தது.

இது பற்றி கேட்டபோது, அந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை என்றும் ஆனால், ஒரு கார் சேதமடைந்துவிட்டதாகவும் அல்ஜுனிட்-ஹவ்காங் நகர மன்றம் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது.

அந்த காரின் உரிமையாளருடன் தொடர்பு கொண்டு இருப்பதாகத் தெரிவித்த அந்த மன்றம், கார் உரிமையாளருக்கு இழப்பீடு பற்றி எதையும் கூறவில்லை..

சம்பவம் நிகழ்ந்த புளோக்கில் பழுதுபார்ப்பு, மறுசீரமைப்பு வேலைகள் நடந்து வந்தன என்றும் மன்றத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

அந்தச் சம்பவம் ஹவ்காங் ஸ்திரீட் 21ல் உள்ள புளோக் 222ல் ஞாயிற்றுக்கிழமை காலை சுமார் 9.25 மணிக்கு நிகழ்ந்ததாக ஷின் மின் குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்