ஒயர்கார்ட் ஆசியா நிறுவன முன்னாள் ஊழியர் இருவருக்குச் சிறை

ஒயர்கார்ட் ஆசியா நிறுவன முன்னாள் ஊழியர் இருவருக்குச் சிறை

1 mins read
fd562ba6-0d34-4616-aba2-0708a0006a29
இருவரும் தலா $223,070 தொகை தொடர்பிலான நம்பிக்கை மோசடி உள்ளிட்ட குற்றங்களை ஒப்புக்கொண்டனர். - கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஒயர்கார்ட் ஆசியா ஹோல்டிங்ஸ் நிறுவனத்திற்கு வேலை பார்த்த இரண்டு பேருக்கு செவ்வாய்க்கிழமை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அவர்கள் தலா $223,070 தொகை தொடர்பிலான நம்பிக்கை மோசடி உள்ளிட்ட குற்றங்களை ஒப்புக்கொண்டார்கள்.

சிங்கப்பூரிலும் உலகளவிலும் ஒயர்கார்ட் ஆசியா தொடர்பிலான குற்றச்செயல்களின் பேரில் குற்றவாளிகள் என்று முதன்முதலாக தீர்ப்பளிக்கப்பட்டவர்கள் இந்த இரண்டு பேருமே ஆவர்.

அவர்களில் ஒருவரான ஜேம்ஸ் அகா வர்தனா, 40, என்பவர் ஒயர்கார்ட் ஆசியாவின் அனைத்துலக நிதி பரிசீலனை நிர்வாகியாக இருந்தபோது இடம்பெற்ற $223,070 கையாடலில் தனக்குத் தொடர்புண்டு என்பதை ஒப்புக்கொண்டார்.

இந்தோனீசியாவைச் சேர்ந்த இவருக்கு 21 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

மற்றொருவரான சாய் அய் லிம், 44, என்ற சிங்கப்பூரருக்கு 10 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் இதர ஐவர் மீதான வழக்குகள் இன்னமும் நிலுவையில் உள்ளன.

அவர்கள் மீது சிங்கப்பூரில் ஏற்கெனவே குற்றம் சுமத்தப்பட்டு இருக்கிறது.

குறிப்புச் சொற்கள்