புதிய ஆலையில் பி&ஜி நிறுவனம் $100 மில்லியனுக்கும் மேல் முதலீடு

புதிய ஆலையில் பி&ஜி நிறுவனம் $100 மில்லியனுக்கும் மேல் முதலீடு

1 mins read
24ea91de-d3f8-4105-b853-a3277348b20e
புரோக்டர் & கேம்பல் நிறுவனத்தின் 35ஆம் ஆண்டு நிறைவு நிகழ்ச்சியில் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் உரையாற்றினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் நிறுவவுள்ள புதிய உற்பத்தி ஆலையில் புரோக்டர் & கேம்பல் (பி&ஜி) நிறுவனம் $100 மில்லியனுக்கும் மேல் முதலீடு செய்யவிருக்கிறது.

செவ்வாய்க்கிழமையன்று செந்தோசாவில் உள்ள கப்பேலா ஹோட்டலில் நடைபெற்ற தனது 35ஆம் ஆண்டு நிறைவு நிகழ்வில் அந்நிறுவனம் அதனை அறிவித்தது.

வணிகம், தொழில்நுட்பம், திறன் ஆகியவற்றுக்கான உலக மையப்பகுதியாக சிங்கப்பூரின் நிலையை மேம்படுத்துவதில் பி&ஜியின் உத்திபூர்வ தொலைநோக்கை இந்த முதலீடு எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது என்று ஆசிய பசிபிக், மத்தியக் கிழக்கு, ஆப்பிரிக்காவுக்கான ‘பி&ஜி’யின் தலைவர் ஸ்டானிஸ்லவ் விசிரா கூறினார்.

ஆலை குறித்த கூடுதல் விவரங்கள் பின்னொரு தேதியில் அறிவிக்கப்படும். அந்தப் புதிய ஆலை அதிகமான வேலைகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பி&ஜி சிங்கப்பூர் நிறுவனம் 1987இல் 100க்கும் குறைவான ஊழியர்களைக் கொண்டிருந்தது.

இப்போது அதில் 40க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 2,300 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.

நிகழ்வில் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங்கும் உரையாற்றினார். வலுவான பங்காளித்துவமே மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை நாம் கடந்த ஆண்டுகளில் கற்றுவந்துள்ளதாக திரு வோங் கூறினார்.

அரசாங்கம் எவ்வளவு செயல்திறன்மிக்கதாக இருந்தாலும், அதனால் எல்லாவற்றையும் செய்யமுடியாது என்றும் அது பங்காளிகளுடன் இணைந்து செயல்படவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்