தரவரிசை: முதல் ஐந்து இடங்களுக்குள் சிங்கப்பூர் பல்கலைக்கழகங்கள்

தரவரிசை: முதல் ஐந்து இடங்களுக்குள் சிங்கப்பூர் பல்கலைக்கழகங்கள்

1 mins read
8f06753f-3584-4e54-a5d7-ccbed809a2a2
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகமும் (என்யுஎஸ்) நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமும் (என்டியு) முதல் ஐந்து இடங்களுக்குள் வந்துள்ளன. - கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

உயர்கல்விக்கான தலைசிறந்த ஆசியப் பல்கலைக்கழகங்களின் பட்டியலை டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ளது.

அதில் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகமும் (என்யுஎஸ்) நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமும் (என்டியு) முதல் ஐந்து இடங்களுக்குள் வந்துள்ளன.

கடந்த நான்கு ஆண்டுகளாக என்யுஎஸ் தரவரிசைப் பட்டியலில் மூன்றாம் இடத்திலும் என்டியு கடந்த 2021ஆம் ஆண்டிலிருந்து ஐந்தாம் இடத்திலும் இருந்தன. இவ்வாண்டும் அவ்விரு பல்கலைக்கழகங்களும் தங்களது இடங்களைத் தக்கவைத்துக் கொண்டன. கடந்த 2015ஆம் ஆண்டிலிருந்து அவ்விரு பல்கலைக்கழகங்களும் முதல் 10 இடங்களுக்குள் வந்துள்ளன.

ஆசியாவின் தலைசிறந்த பத்துப் பல்கலைக்கழகங்களில் பெரும்பாலானவை சீனாவிலும் ஹாங்காங்கிலும் உள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளாக சிங்ஹுவா பல்கலைக்கழகமும் பீக்கிங் பல்கலைக்கழகமும் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளன.

குறிப்புச் சொற்கள்