கேபிஎம்ஜியின் முதல் பெண் நிர்வாகப் பங்காளி

கேபிஎம்ஜியின் முதல் பெண் நிர்வாகப் பங்காளி

1 mins read
55129d73-19fc-4c77-a3f0-6b27b7c3dce4
‘கேபிஎம்ஜி’ சிங்கப்பூர் நிறுவனத்தின் முதல் பெண் நிர்வாகப் பங்காளியாக திருவாட்டி லீ சே யெங் பொறுப்பேற்கவுள்ளார். (உடன்) தற்போதைய நிர்வாகப் பங்காளியாக இருக்கும் ஓங் பாங் டை. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

‘கேபிஎம்ஜி’ சிங்கப்பூர் நிறுவனத்தின் முதல் பெண் நிர்வாகப் பங்காளியாகத் திருவாட்டி லீ சே யெங் பொறுப்பேற்கவுள்ளார்.

தற்போதைய நிர்வாகப் பங்காளியாக இருக்கும் ஓங் பாங் டை அக்டோபர் 1ஆம் தேதி தமது பதவியில் இருந்து விலகுகிறார்.

திருவாட்டி லீ தற்போது துணை நிர்வாகப் பங்காளியாகவும் தணிக்கைப் பிரிவின் தலைவராகவும் உள்ளார்.

நிதிச் சேவைகளின் புத்தாக்கம், சூழல், திறன் போன்றவற்றை மேம்படுத்தும்விதமாக அடுத்த ஐந்து ஆண்டுகளில் 50 மில்லியன் வெள்ளி வழங்கப்படும் என்றும் திருவாட்டி லீ கூறினார்.

குறிப்புச் சொற்கள்