சிங்கப்பூரில் இவ்வாண்டு முதல் தொடக்கநிலை, உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வுகள் இல்லை.
அதனால் தொடக்கநிலை 6, உயர்நிலை 4 மாணவர்கள் மாதிரித் தேர்வுகள் எழுத துணைப்பாட நிலையங்கள் நோக்கிப் படையெடுத்து வருகின்றனர்.
தேசிய அளவிலான தேர்வுகளில் கலந்துகொள்வதற்கு முன்னர் மாதிரித் தேர்வுகளில் மாணவர்கள் கலந்துகொள்வது நல்ல அனுபவம் தரும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
‘ஓவர்மங்ட்’ என்னும் துணைப்பாட நிலையத்தில் மட்டும் கிட்டத்தட்ட 300 மாணவர்கள் மாதிரித் தேர்வுகள் எழுத விண்ணப்பம் செய்துள்ளதாக அது தெரிவித்துள்ளது.
தமது துணைப்பாட நிலைய மாணவர்களைத் தவிர மற்றவர்களுக்கு ஒரு பாட மாதிரித் தேர்வுக்கு 20 வெள்ளி கட்டணத்தை அது நிர்ணயித்துள்ளது.
தொடக்கநிலை ஆண்டிறுதித் தேர்வு, ‘ஓ’ நிலைத் தேர்வு எழுதுபவர்களுக்கு இது ஒரு நல்ல அனுபவம் தரும். இந்த மாதிரி தேர்வுகளில் செய்யும் தவறுகளை முக்கியத் தேர்வுகளில் செய்யாமல் இருக்கவும் நல்ல மதிப்பெண்களைப் பெறவும் அது உதவும் என்று பெற்றோரும் கருதுகின்றனர்.

