சிங்கப்பூர் வானில் தோன்றும் பெருநிலா

சிங்கப்பூர் வானில் தோன்றும் பெருநிலா

1 mins read
301ef512-b308-42f7-8e93-915848891c2e
2020 ஏப்ரல் 8ஆம் தேதி இரவு மத்திய வர்த்தக வட்டாரத்திற்கு மேலே இளஞ்சிவப்பு நிறத்தில் தோன்றிய பெருநிலா. - கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வரும் ஜூலை மாதம் 3ஆம் தேதி பெருநிலா (சூப்பர்மூன்) சிங்கப்பூர் வானில் தோன்றவிருக்கிறது.

இவ்வாண்டில் சிங்கப்பூரில் பெருநிலை முதன்முறையாகத் தோன்றப்போவது இதுவே முதன்முறை. அதன்பின்னரும் இவ்வாண்டில் மும்முறை பெருநிலா நிகழ்வு இடம்பெறும்.

பூமிக்கு மிக அருகில் 362,000 கி.மீ. தொலைவில் சுற்றுவதால் இந்த முழுநிலா வழக்கத்தைவிட பெரியதாகவும் ஒளிமிக்கதாகவும் தெரியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சிங்கப்பூரில் தென்கிழக்குத் திசையில் இரவு 7.13 மணிக்குப் பெருநிலா தெரியத் தொடங்கும் என்றும் இரவு 9 மணியளவில் அது ஒளிமிக்கதாகத் தெரியும் என்றும் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்