பெருவிரைவு ரயில் வட்டப் பாதையில் சேவைத் தடை ஏற்பட்டதற்கு அதை நிர்வகிக்கும் எஸ்எம்ஆர்டி நிறுவனம் பயணிகளிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளது.
வெள்ளிக்கிழமை இரவு வட்டப் பாதையில் இரு முறை சேவைத் தடை ஏற்பட்டது. முதலில் இரவு 8.40 மணிக்கு சேவைத் தடை ஏற்பட்டது. 9.10 மணிக்குள் பிரச்சினை சரிசெய்யப்பட்டது. எனினும், 10 மணிக்கு மீண்டும் சேவைத் தடை ஏற்பட்டது.
ரயிலின் ‘ஆட்டோமெட்டிக் சேனல் கார்ட்’ (ஏடிசி) முறையில் ஏற்பட்ட கோளாற்றால் பிரச்சினை எழுந்ததாக எஸ்எம்ஆர்டி சனிக்கிழமையன்று ஃபேஸ்புக்கில் தெரிவித்தது.
“பாதிக்கப்பட்ட பயணிகளிடம் நாங்கள் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம். நிலைமையைப் புரிந்துகொண்டதற்கும் பொறுமைக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்,” என்று எஸ்எம்ஆர்டி கூறியது.