7,300க்கும் மேற்பட்ட உயிரினங்கள் மதிப்பிடும் பட்டியல்

7,300க்கும் மேற்பட்ட உயிரினங்கள் மதிப்பிடும் பட்டியல்

2 mins read
41686624-b57c-4d40-aaec-bbb81b599e88
சிங்கப்பூரின் உயிரினப் பாதுகாப்பு செயல்திட்டங்களை வழிகாட்ட இந்தப் பட்டியல் விலை மதிப்பில்லாத வளம் என்றார் திரு லீ. பட்டியலின் மேல் பகுதியில் இடம்பெறும் ஆபத்தான நிலையில் உள்ள உயரினங்களுக்கு என்பார்க்ஸ் அதிக முக்கியத்துவம் வழங்கலாம் என்று அவர் மேலும் சொன்னார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

புலாவ் உபின், புலாவ் தெக்கோங் தீவுகளில் இருக்கும் ‘ஆசியன் ஃபால்ஸ் வேம்பாயர்’ எனப்படும் வௌவால் விலங்கு முந்தைய காலங்களில் அழியும் நிலையில் இருந்தது. உயிரினங்களைப் பாதுகாக்க தேசிய பூங்காக் கழகம் (என்பார்க்ஸ்) எடுத்த முயற்சிகளால் தற்போது இந்த வௌவால் இனத்தின் நிலை சற்று மேம்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டில் அறிமுகமான உயிரினங்கள் மீட்சித் திட்டத்தின் கீழ் வௌவால் தங்குமிடங்களை அதிகரிக்க புவாவ் உபின் தீவில் கரடு முரடான மேற்பரப்பு கொண்ட வௌவால் வீடுகளை என்பார்க்ஸ் அமைத்தது.

அண்மையில் வெளிவந்த மூன்றாவது சிங்கப்பூர் சிவப்பு பட்டியலில் இடம்பெறும் பாதுகாப்பு நிலை மேம்பட்ட 560க்கும் மேற்பட்ட உயிரினங்களில் இந்த வௌவாலும் அடங்கும். சிங்கப்பூரில் உள்ள உயிரினங்களின் பாதுகாப்பு நிலையை எடுத்துக்கூறும் ஒரு அதிகாரப்பூர்வ குறிப்பு இந்த பட்டியல்.

இந்த பட்டியலின் நிறைவை தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ சனிக்கிழமை (ஜூன் 24) அறிவித்தார்.

மூன்றாவது முறையாக வெளிவந்த இந்த பட்டியல் ஆக அதிகமான உயிரினங்களை உள்ளடக்குகிறது. 33 உயரின பிரிவுகளில் 7,300க்கும் மேற்பட்ட உயரின வகைகள் இதில் இடம்பெறுகின்றன. இரண்டாவது பட்டியலில் இடம்பெற்ற 2,900 வகைகளில் ஒப்பிடுகையில் இது இரண்டு மடங்கு மேலானது.

120 நிபுணர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட பட்டியலில் இம்முறை எழு பிரிவுகள் முதல் முறையாக மதிப்பிடப்படுகின்றன. ஏற்கெனவே மதிப்பிடப்பட்ட கிட்டத்தட்ட 300க்கும் அதிகமான உயிரினங்களின் தகவல்கள் மேலும் சேர்க்கப்பட்டுள்ளன

இப்பட்டியலுக்கான மதிப்பீடு 2019ஆம் ஆண்டின் நடுவில் தொடங்கி 2023ஆம் ஆண்டு வரை நடந்தது.

சிங்கப்பூரின் உயிரின பாதுகாப்பு செயல்திட்டங்களை வழிகாட்ட இந்த பட்டியல் விலை மதிப்பில்லாத வளம் என்றார் திரு லீ.

“சொந்த, அரிய, அழியும் நிலையில் இருக்கும் உயிரின வகைகளுக்கான பாதுகாப்பு முயற்சிகளை திட்டமிடுதல், முன்னுரிமை வழங்குதல், செயல்படுத்துதல் ஆகியவற்றுக்கு சிவப்பு பட்டியலை என்பார்க்ஸ் குறிப்பாக வைத்துள்ளது,” என்றார் அமைச்சர் லீ.

குறிப்புச் சொற்கள்