வடக்கு-தெற்கு ரயில் பாதை பயணிகள் அருகிலுள்ள கழிவறையைக் கண்டறிய வசதி

வடக்கு-தெற்கு ரயில் பாதை பயணிகள் அருகிலுள்ள கழிவறையைக் கண்டறிய வசதி

1 mins read
6db596bd-a3ce-4d46-876b-7dec08147c44
கியூஆர் குறியீட்டை வருடுவதால் ‘தி வைட்டல் புரோஜெக்ட்’ இணையப் பக்கத்திற்கு இட்டுச்செல்கிறது. - படம்: எஸ்எம்ஆர்டி

வடக்கு-தெற்கு ரயில் பாதையில் பயணம் செய்பவர்கள், அருகில் உள்ள கழிவறையைக் கண்டறிய எம்ஆர்டி நிலையங்களிலும் ரயில்களிலும் கியூஆர் குறியீட்டை வருடி தெரிந்துகொள்ளலாம்.

கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்ட எஸ்எம்ஆர்டி பயணிகள் வாழ்க்கைமுறை ஆய்வில், கழிவறை சேவையே பயணிகளின் அக்கறைக்குரிய விஷயமாக இருப்பது தெரியவந்தது. அதன் பொருட்டு தொடங்கப்பட்டுள்ள எஸ்எம்ஆர்டியின் கைப்பேசிக்கு உகந்த புதிய மின்னிலக்க முன்னோட்டத் திட்டம் தொடங்கப்பட்டது.

மே 25ஆம் தேதியிலிருந்து வரும் வியாழக்கிழமை வரை வடக்கு-தெற்கு ரயில் பாதையில் இந்த முன்னோட்டத் திட்டம் இடம்பெறுகிறது. எஸ்எம்ஆர்டி மறுஆய்வு செய்வதன் அடிப்படையில், இத்திட்டம் விரிவுபடுத்தப்படலாம்.

கியூஆர் குறியீட்டை வருடுவதால் ‘தி வைட்டல் புரோஜெக்ட்’ இணையப் பக்கத்திற்கு இட்டுச்செல்கிறது. எம்ஆர்டி நிலையங்களுக்கு அருகில் உள்ள கழிவறைகளுக்கும் அக்கம்பக்கத்தில் உள்ள வசதிகளுக்கும் அது வழிகாட்டுகிறது. இந்த இணையப் பக்கம் பயனுள்ளதாக இருப்பதாக பயணிகள் சிலர் கூறுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்