தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜோகூர் பாரு நெடுஞ்சாலையில் விபத்து: சிங்கப்பூரர் மரணம்

1 mins read
4232fc85-0499-4e39-a0b2-3187ea983212
ஷின் மா பைக் டோவிங் என்ற நிறுவனம், விபத்தைக் காட்டும் படங்களை ஃபேஸ்புக்கில் பதிவேற்றி, தொடர்புகொள்ளுமாறு உறவினர்கள், நண்பர்களைத் கேட்டுக்கொண்டது. - படம்: ஷின் மா பைக் டோவிங்/ஃபேஸ்புக்

மலேசியாவில் உள்ள ஈஸ்ட்டர்ன் டிஸ்பர்சல் லிங்க் என்ற நெடுஞ்சாலையில் இருக்கும் மேம்பாலச்சாலையில் திங்கள்கிழமை காலையில் மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே விழுந்த சிங்கப்பூரர் மாண்டார்.

அவர், ஜோகூர் சோதனைச்சாவடியை நோக்கி வந்துகொண்டு இருந்தபோது அதிகாலை சுமார் 2 மணிக்கு அந்த விபத்து நிகழ்ந்ததாக மலேசியாவின் சீன மொழி நாளிதழ் சைனா பிரஸ் தெரிவித்தது.

அவர் சிங்கப்பூருக்குத் திரும்பி வந்துகொண்டு இருந்தார். அந்த மோட்டார் சைக்கிளோட்டி, தன் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்ததால் மேம்பாலச்சாலையின் சுவரில் மோதி நெடுஞ்சாலையில் தூக்கி வீசப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

சிங்கப்பூரில் பதிவு பெற்ற அந்த மோட்டார்சைக்கிள், உடல் கிடந்த இடத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் சாலையில் சறுக்கி ஓடிப்போய்க் கிடந்தது என்றும் கூறப்பட்டது. அந்த வாகனம் வாடகை வாகனம் என்பதும் தெரியவந்தது.

மரணமடைந்தவர் முகம்மது டேனியல் அப்துல்லா என்று அவரின் உறவினர் ஒருவர் ஃபேஸ்புக்கில் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
விபத்து