சிங்கப்பூரைச் சேர்ந்த 22வயது ஆடவர் ஜோகூர் பாரு விரைவுச்சாலையில் ஏற்பட்ட விபத்தில் மாண்டார்.
விபத்து ‘ஈஸ்டர்ன் டிஸ்பர்’ விரைவுச் சாலையில் திங்கட்கிழமை அதிகாலை 2 மணியளவில் நடந்ததாக மலேசிய ஊடகங்கள் குறிப்பிட்டன.
ஆடவர் தமது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து விரைவுச்சாலையின் மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து மாண்டதாகக் கூறப்படுகிறது.
ஆடவர் சிங்கப்பூரை நோக்கி வந்துகொண்டிருந்த போது விபத்தில் சிக்கினார்.
மாண்ட நபரின் குடும்பத்தினருக்கு திங்கட்கிழமை காலை 10 மணியளவில் தகவல் கொடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.