தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘மிதிவண்டியில் வந்து மோதிய ஆடவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை’

2 mins read
842917d1-910c-4a16-8ca8-4e449cada9ba
வேகமாக வந்த மிதிவண்டி திருவாட்டி லாய் மீதும் அவரின் 2 வயது மகள் மீதும் மோதியதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. - படம்: ஜோடி லாய் ஃபேஸ்புக்

மிதிவண்டி ஓட்டிகளுக்கும் பாதசாரிகளுக்கும் உல்லாசமான பொழுதாக அமைய வேண்டிய நாள், ஒரு குடும்பத்துக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் நாளாக மாறியது.

ஜூன் 25ஆம் தேதியன்று ஈஸ்ட் கோஸ்ட் லகூன் ஃபூட் வில்லேஜ்ஜில் மதிய உணவுக்குப்பின் திருவாட்டி ஜோடி லாய் அவருடைய குடும்பத்தாருடன் வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தபோது வேகமாக வந்த மிதிவண்டி ஒன்று அவர்கள் மீது மோதியது.

மிதிவண்டிகளும் பாதசாரிகளும் செல்லும் பாதைகள், இணையும் அந்தத் தடத்தில் திருவாட்டி லாய், அவருடைய கணவர், 4 வயது மகன், 2 வயது மகள் ஆகியோர் போய்க்கொண்டிருந்தபோது மகள் கடைசியாக இருந்தார்.

திருவாட்டி லாய் திரும்பிப் பார்த்தபோது மிக வேகமாக வந்துகொண்டிருந்த சைக்கிளோட்டியைப் பார்த்துவிட்டார். இருப்பினும், அந்த சைக்கிளோட்டி முன்னோக்கிப் பார்க்காமல் மிதிவண்டியைப் பார்த்துக்கொண்டிருந்தார். அவர் முன்னால் பார்ப்பதற்குள் மிதிவண்டியை உடனே நிறுத்த முடியவில்லை.

திருவாட்டி லாய் மீதும் அவரின் மகள் மீதும் மிதிவண்டி மோதியதில் திருவாட்டி லாய் கீழே விழுந்து அவருக்குத் தலையிலும் முதுகிலும் அடிப்பட்டுவிட்டது. மகள் முன்னோக்கி விழுந்ததில் அவரின் முகம், கைகள், கால்கள் ஆகியவற்றில் காயம் ஏற்பட்டது.

பிரிட்டிஷ் நாட்டவர் என்று தம்மை அறிமுகப்படுத்திய அந்த சைக்கிளோட்டி ஜார்ஜ், மன்னிப்புக் கேட்டதுடன் காயங்கள் கடுமையாக இருக்காது என்றும் திருவாட்டி ஃபூவிடம் கூறியிருந்தார். சைக்கிளோட்டி இரண்டு தொடர்பு எண்கள் தந்தும் அவருடன் தொடர்புகொள்ள முடியவில்லை என்று திரு ஃபூ குறிப்பிட்டார்.

திருவாட்டி லாய்க்கு 10 நாள்களுக்கு மருத்துவமனை விடுப்பு வழங்கப்பட்டது. மகள் மருத்துவமனையில் இரண்டு நாள்கள் தங்கியபின் வீட்டுக்கு அனுப்பப்பட்டார். மீண்டும் 28ஆம் தேதியன்று பள்ளிக்கும் திரும்பிவிட்டதாக திருவாட்டி லாய் கூறினார்.

இதற்கிடையே, திரு ஃபூ காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள் முன்வருமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாகவும் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்