மனிதவள அமைச்சு நடத்திய சோதனையில் பாதுகாப்பு விதிமீறல்கள் கண்டறியப்பட்டதை அடுத்து ‘ஜே அண்ட் சி’ புதுப்பிப்பு நிறுவனத்திற்கு $8,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
புக்கிட் பாத்தோக் வட்டாரத்தில் உள்ள எங் கோங் டெரஸ் பகுதியில் உள்ள கடை வீடு ஒன்றில் பாதுகாப்பற்ற முறையில் புதுப்பிப்புப் பணிகள் நடைபெறுவதாகத் தகவல் கிடைக்கவே அமைச்சு ஜூன் 8ஆம் தேதி அங்கு சோதனை நடத்தியது.
கடை வீட்டின் கூரையில் உரிய பாதுகாப்புத் தடுப்புகள் இன்றி ஊழியர்கள் வேலைசெய்ததைக் காண முடிந்ததாக அது குறிப்பிட்டது.
மேலும், ஆபத்து மதிப்பீடு, உயரத்திலிருந்து கீழே விழுவதைத் தடுப்பதற்கான திட்டங்கள் தொடர்பான முறையான ஆவணங்கள் புதுப்பிப்பு நிறுவனத்திடம் இல்லை என்றும் கண்டறியப்பட்டது. அதையடுத்து உடனடியாக வேலை நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
இதுகுறித்துத் தகவல் அளித்தவருக்கு நன்றி தெரிவித்துக்கொண்ட அமைச்சு, இத்தகைய நடவடிக்கைகள் குறித்துப் புகாரளிப்பதால் மனித உயிர்களைக் காக்க முடியும் என்பதைச் சுட்டியது.