மலேசியப் பேராசிரியர் டி. மாரிமுத்து தலைமையிலான பன்னாட்டு உறுப்பினர்களைக் கொண்ட மாநாட்டுக்குழு, 11ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை வரும் ஜூலை மாதம் 21, 22, & 23 ஆகிய தேதிகளில் மலேசியத் தலைநகரம் கோலாலம்பூரில், யுனிவர்சிட்டி மலாயாவுடன் இணைந்து நடத்தவிருக்கிறது. அதன் தொடர்பில் சிங்கப்பூரிலிருந்து மாநாட்டில் பங்கேற்போர் பதிவு நடைபெற்று வருகிறது.
மாநாட்டில் பங்கேற்க விழைவோருக்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்திட ஏதுவாக வரவிரும்புவோர் தங்களை முன்கூட்டியே பதிவு செய்துகொள்ளவும். முன் தொகையாக ஜூன் 30ஆம் தேதிக்குள் $100யை 90053043 எனும் திரு அன்பழகனின் தொலைபேசி எண்ணுக்குப் பேநவ் மூலம் செலுத்திவிட்டு வாட்ஸ்அப்பில் செய்தியைத் தெரிவிக்கவும் என்று அறிவித்திருந்த நிலையில், பலர் தங்களைப் பதிவுசெய்து வருகிறார்கள்.
தமிழ் ஆர்வலர்களின் வேண்டுகோளுக்கிணங்க அந்தத் தேதி ஜூலை மாதம் 5 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


