இணையம் வழி சந்திக்கும் முறையைத் தொடரத் தேவையில்லை

இணையம் வழி சந்திக்கும் முறையைத் தொடரத் தேவையில்லை

1 mins read
3588de1c-7afd-4f5b-b3ba-3f7292c56cf0
படம்: - ஏஎஃப்பி

சிங்கப்பூரில் உள்ள நிறுவனங்கள் ஜூலை 1ஆம் தேதி முதல் இணையம் வழி சந்திக்கும் முறையைத் தொடரத் தேவையில்லை என்று சட்ட அமைச்சு வெள்ளிக்கிழமை அன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கொவிட்-19 கொள்ளை நோய் காரணமாக 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நிறுவனங்கள் தங்களது சந்திப்புகளை இணையம் வழி நடத்திக்கொள்ள புதிய விதிமுறை அறிமுகம் செய்யப்பட்டது.

நிறுவனங்கள் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள போதிய நேரம் கொடுக்கும்விதமாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே முன்னறிவிப்பு வழங்கப்பட்டதாக அமைச்சு தெரிவித்தது.

பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் இனி சந்திப்புகளை முழுமையாக இணையத்தில் நடத்த அனுமதி இல்லை.

பங்குச்சந்தையில் பட்டியலிடப்படாத நிறுவனங்கள் சந்திப்புகளை முழுமையாக இணையத்தில் நடத்திகொள்ளலாம்.

இணையச் சந்திப்புகள் குறித்த மேல்விவரங்களை அமைச்சின் இணையப்பக்கத்தில் தெரிந்துகொள்ளலாம்.

குறிப்புச் சொற்கள்
கொவிட்-19அலுவலகம்