தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வீட்டிலிருந்து குப்பைகளை வெளியே வீசுபவர்களுக்கு கடுமையான தண்டனை

1 mins read
4cde73ba-e0c5-4c5b-be67-4c5f081c9991
படம்: - ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் ஜூலை 1ஆம் தேதி முதல் வீட்டில் இருந்து குப்பைகளை வெளியே வீசுபவர்களுக்குக் கடுமையான தண்டனை விதிக்கப்படும்

.தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றத்தை குற்றஞ்சாட்டப்பட்டவர் 14 நாட்களுக்குள்  நிரூபிக்க வேண்டும் அப்படி செய்யத் தவறினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

முதல்முறை குற்றம் செய்தவர்களுக்கு 2,000 வெள்ளி வரையிலான அபராதம் விதிக்கப்படும். இரண்டாவது முறை குற்றம் செய்தால்  2,000 வெள்ளி வரையிலான அபராதம் விதிக்கப்படும். மூன்றுமுறை அல்லது அதற்கு மேல் குற்றம் செய்தால் 10,000 வெள்ளி வரையிலான அபராதம் விதிக்கப்படும். 

கூடுதலாக அவர்கள் பொது இடங்களை 12 மணி நேரம் சுத்தம் செய்யவும் உத்தரவிடப்படலாம்.

இந்த புதிய விதிமுறை கடந்த ஜனவரி மாதம் நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. 

புதிய விதிமுறை வீட்டு உரிமையாளர்களும் வாடகைத்தாரர்களும் மேலும் பொறுப்பாக செயல்பட உதவும் என்று தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்