சிங்கப்பூரில் வங்கி அடிப்படையிலான திருட்டுச் செயலி மோசடி விவகாரங்களில் ஈடுபட்டு இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் 13 பேர் கைதாகி உள்ளனர். அவர்களில் 16 வயது இளைஞரும் ஒருவர்.
பிடிபட்டுள்ள சந்தேக நபர்களில் 10 பேர் அந்த மோசடிகள் இடம்பெற உதவி இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
அவர்கள் தங்கள் வங்கிக் கணக்குகளை, இணைய வங்கி தகவல்களை மற்றும்/ அல்லது சிங்பாஸ் விவரங்களை பணத்துக்காக கொடுத்து அதன் மூலம் மோசடிகள் இடம்பெற உதவி இருக்கிறார்கள் என்பது முதல் கட்ட விசாரணை மூலம் தெரிகிறது.
அந்தப் பத்து பேரும் 16 வயது முதல் 27 வயது வரைப்பட்டவர்கள். இதர மூவரும் 20க்கும் 35க்கும் இடைப்பட்ட வயதுள்ளவர்கள்.
இந்த மூவரும் அத்தகைய வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை எடுத்து அதை முன்பின் தெரியாதவர்களிடம் கொடுத்து இருக்கிறார்கள்.
வர்த்தக விவகாரத் துறை அதிகாரிகளும் காவல்துறையின் உளவுப் பிரிவு அதிகாரிகளும் ஜூன் 26ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதிவரை நாடு முழுவதும் எடுத்த மோசடி ஒழிப்பு நடவடிக்கையின்போது சநதேக நபர்கள் பிடிபட்டனர்.
புலன்விசாரணை தொடர்வதாகவும் இதர ஒன்பது ஆடவர்களும் ஒரு மாதும் புலன்விசாரணையில் உதவி வருவதாகவும் காவல்துறை அறிக்கையில் குறிப்பிட்டது.