ஆசியாவின் பாதிக்கும் மேற்பட்ட குடும்ப அலுவலகங்கள் சிங்கப்பூரில் உள்ளன

ஆசியாவின் பாதிக்கும் மேற்பட்ட குடும்ப அலுவலகங்கள் சிங்கப்பூரில் உள்ளன

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

02 Jul 2023 - 3:08 pm

1 mins read

ஆசியாவின் பாதிக்கும் மேற்பட்ட குடும்ப அலுவலகங்கள் சிங்கப்பூரில் உள்ளதாக ‘கேபிஎம்ஜி’ நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது

உலகில் உள்ள குடும்ப அலுவலகங்களில் 9 விழுக்காடு ஆசியாவில் இயங்குகின்றன. அதில் 59 விழுக்காடு சிங்கப்பூரில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

உலக அளவில் கிட்டத்தட்ட 20,000 குடும்ப அலுவலகங்கள் உள்ளன.

பெரும் செல்வம் உள்ள குடும்பங்கள் தங்கள் செல்வத்தை பாதுகாப்பாகஅதிகரிக்கவும் நிர்வாகம் செய்யவும் குடும்ப அலுவலகங்களைத் திறப்பார்கள்.

பொதுவாக ஆசியாவில் உள்ள குடும்ப அலுவலகங்களை நிர்வாகம் செய்யும் தலைமை நிர்வாகி ஆண்டிற்கு 158,000 வெள்ளி முதல் 500,000 வெள்ளி வரை சம்பளமாக பெறுவார்.

ஆசியாவில் உள்ள பெரும்பாலான குடும்ப அலுவலகங்கள் 10 அல்லது அதற்கு குறைவான ஆண்டுகள் தான் செயல்பட்டு வருகின்றன.

ஆசிய குடும்ப அலுவலகங்களில் 27 விழுக்காடு மூன்று தலைமுறை செல்வத்தை நிர்வாகம் செய்கின்றனர். 38 விழுக்காட்டினர்  இரண்டு தலைமுறை செல்வத்தையும் 32 விழுக்காடு ஒரு தலைமுறை செல்வத்தையும் நிர்வாகம் செய்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்