தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கம்பர்ட்டெல்குரோ துணை நிறுவனத்திற்கு ஆஸ்திரேலியா பேருந்து குத்தகை

1 mins read
8029a3ff-d442-4774-9e67-a91d003ef6e3
சிட்னியின் மாநகர்ப் பகுதிகளில் சிடிசி என்எஸ்டபிள்யூ நிறுவனம் இரண்டு பேருந்து உடன்பாடுகளின் பேரில் சேவைகளை வழங்கி வருகிறது. - படம்: கம்பர்ட்டெல்குரோ 

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்சில் A$200 மில்லியன் (S$180.4 மில்லியன்) மதிப்புள்ள புறநகர் பேருந்து ஒப்பந்தத்தை தனது மறைமுக துணை நிறுவனம் பெற்றுள்ளதாக கம்பர்ட்டெல்குரோ நிறுவனம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

அந்த எட்டு ஆண்டு ஒப்பந்தம் 2024 ஜூலையில் இருந்து தொடங்கும் என்று அந்தக் குழுமம் குறிப்பிட்டது.

அந்தக் குத்தகையை ‘ரெட் பஸ் சிடிசி என்எஸ்டபிள்யூ’ என்ற நிறுவனம் பெற்று இருக்கிறது.

ரெட் பஸ் சர்வீசஸ் என்ற நியூ சவுத் வேல்ஸ் பேருந்து நிறுவனமும் சிடிசி என்எஸ்டபிள்யூ நிறுவனமும் ரெட் பஸ் சிடிசி என்எஸ்டபிள்யூ நிறுவனத்தில் சம அளவில் பங்குகளைக் கொண்டிருக்கின்றன.

இந்தப் புதிய ஒப்பந்தத்தையும் சேர்த்தால் சிடிசி என்எஸ்டபிள்யூ நிறுவனம் நிர்வகித்து நடத்தும் பேருந்துச் சேவை உடன்பாடுகளின் எண்ணிக்கை நான்காக அதிகரிக்கும்.

இதனிடையே, இந்த அறிவிப்பைத் தொடர்ந்து கம்பர்ட்டெல்குரோ பங்கு விலை செவ்வாய்க்கிழமை காலை 9.16 மணியளவில் ஒரு காசு வரை உயர்ந்து ஒரு பங்கு $1.19 என்று விலைபோனது.

குறிப்புச் சொற்கள்