14 வயது சிறுவனை மானபங்கம் செய்த சந்தேகத்தின் பேரில் 47 வயது ஆடவர் மீது செவ்வாய்க்கிழமை குற்றஞ்சாட்டப்பட்டது.
சிறுவனும் சந்தேக நபரும் ஒரே புளோக்கில் வசிப்பதாக காவல்துறை தெரிவித்தது.
சம்பவம் குறித்து ஞாயிற்றுக்கிழமை காலை காவல்துறைக்குப் புகார் கொடுக்கப்பட்டது.
புகார் கொடுத்த நான்கு மணி நேரத்திற்குள் சந்தேக நபரை அதிகாரிகள் அடையாளம் கண்டனர்.
சந்தேக நபர் மனநலக் கழகத்தில் மருத்துவப் பரிசோதனைக்காகத் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.
வழக்கு விசாரணை ஜூலை 18ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.