புதிய சட்டம் வகை செய்கிறது; அடக்குமுறை நடத்தையும் குடும்ப வன்செயலாகக் கருதப்படும்

குடும்ப வன்செயலில் சிக்குவோரை இன்னும் சிறந்த முறையில் பாதுகாக்கவும் தவறு செய்வோர் மறுவாழ்வு பெறுவதை, தங்கள் செயல்களுக்குப் பொறுப்பு ஏற்பதை மேம்படுத்தவும் தோதாக சட்டம் பலப்படுத்தப்பட்டு வருகிறது.

பெண்கள் சாசனம் (குடும்ப வன்செயல், இதர விவகாரங்கள்) திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் இரண்டாவது வாசிப்புக்குத் தாக்கல் செய்து பேசிய சமுதாய, குடும்ப மேம்பாட்டு துணை அமைச்சர் சுன் சூவெலிங், அரசாங்கம் எந்த வழியிலும் வன்செயலை ஏற்பதில்லை என்றார்.

குடும்ப வன்செயல் என்பது சமூகத்தின் அடிப்படை நன்னெறிகளுக்கு எதிரானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

பெண்கள் சாசனம் (குடும்ப வன்செயல், இதர விவகாரங்கள்) திருத்த மசோதா கடந்த மே மாதம் மன்றத்தில் தாக்கலானது. அது திங்கள்கிழமை நிறைவேறியது.

வன்செயலுக்கு இலக்காவோரை இன்னும் சிறந்த முறையில் பாதுகாக்கவும் குற்றம் புரிவோருக்கான மறுவாழ்வு நடைமுறைகளைப் பலப்படுத்தவும் நீதிமன்றத்திற்கு அந்த மசோதா அதிக அதிகாரங்களை வழங்குகிறது.

குடும்ப வன்செயல் பல வகையில் இடம்பெறக்கூடிய சிக்கலான விவகாரம் என்பதைச் சுட்டிய துணை அமைச்சர், குடும்ப வன்செயல் தொடர்பான இப்போதைய வரையறையைப் புதிய மசோதா மேம்படுத்தும் என்றும் குறிப்பிட்டார்.

உடல்ரீதியில் பாலியல், உணர்வு, மனோவியல் வழிகளில் இடம்பெறக்கூடிய கொடுமைகள் எல்லாம் குடும்ப வன்செயலில் அடங்கும் என்பதை அந்த மசோதா தெள்ளத் தெளிவாகக் குறிப்பிடும்.

உணர்வுபூர்வமாகக் கொடுமைப்படுத்துவதும் மனரீதியில் கொடுமைப்படுத்துவதும் உடல்ரீதியாக பாலியல் ரீதியாகக் கொடுமைப்படுத்துவதைப் போன்றதுதான் என்று திருவாட்டி சுன் குறிப்பிட்டார்.

மாதாமாதம் கிடைக்கும் உதவித் தொகையை நிறுத்திவிடப்போவதாக மிரட்டுவது, இருக்கும் இடத்தைத் தெரிந்துகொள்ள இடைவிடாமல் தொடர்புகொண்டு தொல்லை கொடுப்பது, வீட்டை விட்டு வெளியே சென்று நண்பர்களை, குடும்பத்தாரைச் சந்திக்கக் கூடாது என்று கட்டுப்படுத்துவது போன்றவை அடக்குமுறை நடத்தைக்கு எடுத்துக்காட்டு என்றும் அவர் கூறினார்.

ஒருவரைக் கட்டுப்படுத்தக்கூடிய இத்தகைய அடக்குமுறை நடத்தைகள், உணர்வுபூர்வமான, மனரீதியிலான கொடுமைகள் என்று புதிய மசோதாவின்கீழ் வகைப்படுத்தப்படும்.

புதிய திருத்தங்கள் பாதிக்கப்படுவோருக்கு அதிக உத்தரவாதத்தைக் கொடுக்கும். அடக்குமுறை கொடுமைகளுக்கு ஆளாவோருக்கு நிவாரண உதவிகளும் புதிய மசோதாவின்கீழ் கிடைக்கும்.

குடும்ப வன்செயலில் நிதி தொடர்பான கொடுமைகளையும் சேர்ப்பதா என்பது பற்றியும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு ஆராய்ந்து இருக்கிறது.

இது சிக்கலான விவகாரம் என்பதால் மேற்கொண்டும் இதை அமைச்சு ஆராய்கிறது என்று திருவட்டி சுன் தெரிவித்தார்.

குடும்பம் சாராத உறுப்பினர்களைப் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளைப் பலப்படுத்தும் வகையில் எதிர்காலத்தில் தனிப்பட்ட குடும்ப வன்செயல் சட்டம் ஒன்றை இயற்றும் சாத்தியம் பற்றி ஆராயவும் அமைச்சு ஆயத்தமாக இருக்கிறது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

குடும்ப வன்செயலைக் கண்டுபிடிப்பது மிகவும் சிரமமானது. அத்தகைய வன்செயல் பிரத்தியேகமாக நடப்பதால் வெளியே அவ்வளவாகத் தெரியாது என்றும் அவர் கூறினார்.

கொடுமைக்கு ஆளாவோர் அவமானம், அவப்பெயர், குடும்பம் உடைந்துவிடும் என்ற கவலை, குடும்ப வன்செயல் என்பது தனிப்பட்ட விவகாரம் என்ற ஓர் எண்ணம் ஆகியவை காரணமாக உதவி தேட தயங்குவார்கள்.

அதேபோலவே ஒரு குடும்பத்தில் நடக்கும் வன்செயல் பற்றி தெரிந்தவர்களும் அதில் சம்பந்தப்பட தயங்குவார்கள். தாங்கள் சம்பந்தப்பட்டால் வேறுவிதமான பிரச்சினைகள் உருவாகக்கூடும் என அவர்கள் அஞ்சுவார்கள்.

குடும்ப வன்செயலில் சிக்குவோர் தங்களைச் சிறந்த முறையில் பாதுகாத்துக்கொள்ள புதிய திருத்தங்கள் வகை செய்யும். அவர்கள் தாங்களாகவே பிரத்தியேகப் பாதுகாப்பு உத்தரவைப் பெற விண்ணப்பிக்க முடியும்.

குடும்ப வன்செயலில் அரசாங்கம் தலையிடுவதற்கு இப்போது இருப்பதைவிட இன்னும் அதிக அதிகாரம் இருக்கும். நீதிமன்றத்துக்கும் தண்டனையை அதிகப்படுத்த அதிகாரம் இருக்கும்.

இதர செயல்திட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் இப்போதைய ஆலோசனை உத்தரவு விரிவுபடுத்தப்படும்.

குற்றவாளிகளுக்கு எதிராக கட்டாய சிகிச்சை உத்தரவுகளையும் நீதிமன்றம் பிறப்பிக்க முடியும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!