மின்னிலக்க பயிற்சி திட்ட விரிவாக்கம்

வாழ்நாள் கல்வி என்ற தேசிய இயக்கத்துக்கு முட்டுக் கொடுத்து விரிவுபடுத்தப்படும். இதில் மின்னிலக்க திறன்களை வளர்க்கும் விதமாக அதற்கான பயிற்சித் திட்டங்களுக்கு மேலும் ஆதரவு வழங்கப்படும். அத்துடன், இதில் உதவி தேவைப்படுவோர் மீது கூடுதல் கவனம் செலுத்தப்படும்.

இதை செவ்வாய்க்கிழமையன்று தெரிவித்த கல்வி அமைச்சர் சான் சுன் சிங், 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஸ்கில்ஸ்ஃபியூச்சர் திட்டம் மாறிவரும் உலகுக்கு ஏற்றவாறு வேகமாகவும் விரிவாகவும் திறன்களை மேம்படுத்தும் என்று கூறினார்.

பாய லேபாரில் அமைந்துள்ள வாழ்நாள் கற்றல் நிலையத்தில் நடைபெற்ற ஸ்கில்ஸ்ஃபியூச்சர் கருத்தரங்கில் அமைச்சர் சான் உரையற்றினார்.

வர்த்தகம், வாழ்க்கைத் தொழில் மேம்பாடு வளர்ச்சிக்கு மின்னிலக்க திறன்மேம்பாடு தொடர்பாக இந்தக் கருத்தரங்கு பிசினஸ் டைம்ஸ், எஸ்பிஎச் ஊடக குழுமத்தின் ஆதரவில் நடைபெற்றது.

துடிப்பான வேலைச் சந்தையில் தேவைக்கும், இருப்புக்கும் ஏற்றவாறு திறன்களை ஒருங்கிணைக்க கூடுதல் முயற்சி மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார்.

இதில் தேவைப்படும் திறன்களை கண்டறிவதோடு அவற்றை தேவையான பயிற்சித் திட்டங்களாக உருவாக்க வேண்டியுள்ளதாக அவர் விளக்கினார்.

“மற்றொருபுறம், முதலாளிகள் வேலைக்கு ஆள்சேர்க்கும்போது ஊழியர்களின் நற்சான்றிதழ்களையும் சான்றிதழ்களையும் அங்கீகரிக்க வேண்டும்,” என்றும் அவர் கூறினார்.

பசுமைப் பொருளாதாரத்தை நோக்கிச் செல்லும்போது சிங்கப்பூரில் 2022ஆம் ஆண்டு சூரிய ஒளிமின்னழுத்த எரிசக்தி மதிப்பீட்டுத் துறையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான தேவை அதிகமாக உள்ளதாக அமைச்சர் சொன்னார்.

உள்ளூரில் பொருள் மேம்பாடு, வாடிக்கையாளர் அனுபவத்துக்கு ஈடுகொடுத்து சமாளிப்பது, பெரிய அளவிலான தரவு பகுப்பாய்வு, செயற்கை நுண்ணறிவு போன்ற திறன்படைத்தவர்களுக்கு அனைத்துத் துறைகளிலும் அதிக தேவை உள்ளதாக அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

சிங்கப்பூரர்கள் மின்னிலக்க திறன்களைப் பெறுவதற்கு ஏதுவாக ஸ்கில்ஸ்ஃபியூச்சர் மின்னிலக்க ஊழியரணியின் திட்டங்களில் புதுப்பிக்கப்பட்ட பாடத் திட்டங்கள் இருக்கும். இந்தத் திட்டங்கள் நான்கு பிரிவுகளான தானியக்கம், இணைய பாதுகாப்பு இடர்பாடு தரவு பகுப்பாய்வு, தேவை மிகுதியாக உள்ள மின்னிலக்க திறன்கள் போன்வற்றை உள்ளடக்கியது.

ஸ்கில்ஸ்ஃபியூச்சர் இயக்கம் 40, 50 வயதுகளில் உள்ள முதிய நடுநிலை ஊழியர்கள், சிறிய, நடுத்தர நிறுவனங்கள் ஆகிய அதிக தேவையுள்ள, பின்தங்கிவிடக்கூடிய பிரிவுகளான இவர்கள் மீது கவனம் செலுத்தும் என்றார் திரு சான்.

இதில் 40, 50 வயதுகளில் உள்ள முதிய நடுநிலை ஊழியர்கள் தங்களது மனிதவளத்தை பேணவும் தங்களுடைய வேலைத் தகுதியை பாதுகாத்துக் கொள்ளவும் வேண்டிய நிலையில் உள்ளனர் என்று அமைச்சர் சான் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் 2022ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 2,500 முதிய ஊழியர்கள் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் பல்வேறு திட்டங்களில் பயிற்சி பெற்றனர் என்று கல்வி அமைச்சர் சான் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!