ஊழியர்களை ஏற்றிச்செல்ல பயன்படுத்தப்படும் லாரிகளைத் தடைசெய்யக் கோரி, நீ சூன் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லூயிஸ் இங் நாடாளுமன்றத்தில் மீண்டும் அறைகூவல் விடுத்துள்ளார்.
இதற்கு அதிகாரிகள் திட்டம் வகுக்குமாறும் இடைக்காலத்தில் இதர பாதுகாப்பு நடைமுறைகளைச் செயல்படுத்துமாறும் அவர் பரிந்துரைத்தார்.
பாதுகாப்புக் காரணங்களுக்காக பயணிகள் லாரிகளில் பின்னால் அமர்ந்து பயணம் செய்ய அனுமதிக்கப்படக்கூடாது என்பதற்கு தெளிவான விதிமுறை இருக்க வேண்டும் என்று திரு இங் வலியுறுத்தினார்.
இதை உடனடியாகச் செய்ய முடியாவிட்டாலும், இதை எப்போது செயல்படுத்துவது என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
லாரிகளில் பின்னால் ஊழியர்களை ஏற்றிச்செல்லும் விவகாரம் குறித்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதித்து வந்துள்ளனர்.
2021ல் நிகழ்ந்த நான்கு லாரி விபத்துகளில் இரு ஊழியர்கள் இறந்ததுடன் 30க்கும் மேற்பட்டவர்கள் காயமுற்றதைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.