சிங்கப்பூரில் உள்ள ஷெல், கால்டெக்ஸ் நிறுவனங்கள் எரிபொருள் விலைகளைக் கூட்டியுள்ளன.
மற்ற எரிபொருள் நிறுவனங்களைவிட லிட்டருக்கு கிட்டத்தட்ட 5 காசு வரை விலையை உயர்த்துகின்றன இந்நிறுவனங்கள்.
தற்போது சலுகைகளுக்குமுன் 95-ஆக்டேன் பெட்ரோல் விலை, ஷெல்லில் ஒரு லிட்டர் 2.76 வெள்ளி, கால்டெக்சில் 2.79 வெள்ளி. எஸ்ஸோவில் 2.75 வெள்ளி, எஸ்பிசியில் 2.70 வெள்ளி.
92-ஆக்டேன் பெட்ரோல் விலை கால்டெக்சில் ஒரு லிட்டர் 2.74 வெள்ளி, எஸ்பிசி, எஸ்ஸோவில் 2.70 வெள்ளி. ஷெல்லில் இந்த வகை எரிபொருள் விற்கப்படுவது இல்லை.
98-ஆக்டேன் பெட்ரோல் விலை ஷெல்லில் ஒரு லிட்டர் 3.25 வெள்ளி, கால்டெக்சில் 3.45 வெள்ளி.
டீசல் விலை விவரங்கள்: ஷெல்லில் ஒரு லிட்டர் 2.37 வெள்ளி, கால்டெக்சில் 2.40 வெள்ளி. எஸ்ஸோ, எஸ்பிசியில் 2.36 வெள்ளி.

