பிடோக் கார் விபத்தில் சிக்கிய சைக்கிளோட்டி மருத்துவமனையில் அனுமதி

1 mins read
1bad75b8-69e7-4f54-9cbe-b95c98d86a59
விபத்தில் சிக்கிய 31 வயது பெண் சைக்கிளோட்டி, சுயநினைவுடன் சாங்கி பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.  - படம்: சிங்கப்பூர் ரோட்ஸ் எக்சிடென்ட். காம்/ஃபேஸ்புக்

பிடோக் சாலைச் சந்திப்பு ஒன்றில் வியாழக்கிழமை காலையில் காரில் மோதிக்கொண்ட சைக்கிளோட்டி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

‘சிங்கப்பூர் ரோட்ஸ் எக்சிடென்ட். காம்’ எனும் ஃபேஸ்புக் பக்கத்தில் இடம்பெற்ற காணொளியில், காருடன் மோதிய ஒரு சைக்கிள் நசுங்கி, பிஎம்டபிள்யூ காருக்கு அடியில் சிக்கிக்கொண்டதைக் காண முடிந்தது.

காணொளியில் மருத்துவ வாகனம் ஒன்று நின்றுகொண்டிருப்பதும் தென்பட்டது.

பிடோக் சவுத் அவென்யூ 1க்கும் பிடோக் சவுத் ரோட்டுக்கும் இடைப்பட்ட சாலைச் சந்திப்பில் நிகழ்ந்த விபத்து பற்றி சிங்கப்பூர் காவல்துறைக்கும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கும் காலை 7.45 மணிக்குத் தகவல் கிடைத்தது.

விபத்தில் சிக்கிய 31 வயது பெண் சைக்கிளோட்டி, சுயநினைவுடன் சாங்கி பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அவரது உடல்நிலை சீராக உள்ளது. காவல்துறையின் புலனாய்வு தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்
விபத்து