தேசிய தினப் பேரணி உரையில் கலந்துகொள்ள பிரதமர் லீ அழைப்பு

1 mins read
78288a0b-d293-4a5a-ae6e-8c888d88a391
படம்: - திரெட்ஸ் சமூக ஊடகம்

பிரதமர் லீ சியன் லூங் தேசிய தினப் பேரணி உரையில் பொதுமக்கள் கலந்துகொள்ள இணையம் வழி போட்டி அழைப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

போட்டி குறித்து மெட்டா நிறுவனம் புதிதாக வெளியிட்டுள்ள சமூக ஊடகமான ‘திரெட்ஸ்’ மூலம் வெள்ளிக்கிழமை பிரதமர் லீ பதிவிட்டார்.

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தேசிய தினப் பேரணி உரை நடக்கிறது. கலந்துகொள்ள விருப்பமா ? #InviteMeToNDR  என்று கேட்டு, விண்ணப்பப் படிவமும் அப்பதிவுடன் இணைக்கப்பட்டுள்ளது.

படிவத்தில், சிங்கப்பூரராகப் பெருமைப்படுவதற்கு ஒரு காரணத்தைப் போட்டியாளர்கள் எழுத வேண்டும். 

விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கான இறுதி நாள் ஜூலை 23.

போட்டி குறித்த மேல் விவரங்களை பிரதமர் லீயின் திரெட்ஸ் பக்கத்தில் காணலாம். 

வெள்ளிக்கிழமை இரவு நிலவரப்படி  பிரதமர் லீயின் திரெட்ஸ் பக்கத்தை 7,500க்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்