தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சேணத்துடன் விரைவுச்சாலையில் ஓடிய குதிரை

1 mins read
c1a5d176-6b84-4226-a3fe-f7b27e0a4814
புக்கிட் தீமா விரைவுச்சாலையில் பல தடங்களிலும் சனிக்கிழமை அப்படியும் இப்படியுமாக பாய்ந்து ஓடி போக்குவரத்தை நிறுத்திய பழுப்பு நிறக் குதிரை. - படம்: ஃபேஸ்புக்

சிங்கப்பூர் குதிரைப் பந்தய மன்றம் மூடப்பட உள்ளது. குதிரை பயிற்றுவிப்பாளர்கள் வேறு வேலை தேடுகிறார்கள். குதிரைகள் தங்குமிடமில்லா நிலைக்கு உள்ளாகிவிட்டன.

இந்த நிலையில், ஒரு பழுப்புநிறக் குதிரை சேணத்துடன் சனிக்கிழமை புக்கிட் தீமா விரைவுச்சாலையில் பல தடங்களிலும் அங்கும் இங்கும் பாய்ந்து ஓடியதைக் காண முடிந்தது.

அந்தக் குதிரை தன்னை நோக்கி வந்த கார்களைத் திரும்பிப் பார்த்ததால் வாகனங்களை நிறுத்த வேண்டிய நிலைகூட ஏற்பட்டது.

இதுபற்றி கருத்து தெரிவித்த சிங்கப்பூர் குதிரைப் பந்தய மன்றத்தின் பேச்சாளர், புக்கிட் தீமா குதிரையேற்ற பயிற்சிக் கழகத்திற்குச் சொந்தமான அந்தக் குதிரை, தனது லாயத்தை விட்டு கொஞ்ச நேரம் சாலைக்கு ஓடிவிட்டது. பிறகு அது லாயத்திற்குத் திரும்பிவிட்டது என்று தெரிவித்தார்.

அந்தக் குதிரை தங்களுடையது அல்ல என்று சிங்கப்பூர் குதிரை பந்தய மன்றம் கூறியது.

எண் 51 ஃபேர்வேஸ் டிரைவ் முகவரியில் 72 ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த புக்கிட் தீமா குதிரையேற்றப் பயிற்சிக் கழகம், கடந்த பிப்ரவரியில் கிராஞ்சியில் உள்ள சிங்கப்பூர் குதிரை பந்தய மன்றத்திற்கு தனது 78 குதிரைகளுடன் இடம் மாறியது.

சம்பவம் பதிவான காணொளி: https://www.facebook.com/100004357662866/videos/583871977006551/

குறிப்புச் சொற்கள்