வலுவான கலாசாரத்துக்கு மற்றவர்களிடம் இருந்து கற்பது அவசியம்: தர்மன்

வலுவான கலாசாரத்துக்கு மற்றவர்களிடம் இருந்து கற்பது அவசியம்: தர்மன்

2 mins read
f149a787-0add-4357-a504-d6e5c81272bb
ரெட்ஹில்லில் உள்ள ஸென் ரென் கோங் பௌத்த ஆலயத்தில் நடைபெற்ற திருவிழாவில் பக்தர்களைச் சந்திக்கும் திரு தர்மன் சண்முகரத்னம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் தனது வளர்ச்சியின் அடுத்தகட்டத்துக்குச் செல்லும் வேளையில், தனக்கு என்ன அடையாளம் வேண்டும் என்பதையும் தனது பாரம்பரியங்களை எவ்வாறு உயிரோட்டத்துடன் வைத்திருப்பது என்பதையும் அது கேட்க வேண்டும்.

சிங்கப்பூர் பல கலாசாரங்களைக் கொண்ட நாடாக இருந்தாலும், அது வெவ்வேறு கலாசாரங்கள் அதே நிலையில் இருப்பதன் பற்றியதாக மட்டும் இருந்துவிட முடியாது.

அதே வேளையில், வெவ்வேறு கலாசாரங்களை ஒன்றாகச் சேர்ப்பதை அல்லது அவற்றைப் பிணைப்பதைத் தீர்வாகக் கருத முடியாது என்று திரு தர்மன் சண்முகரத்னம் ஞாயிற்றுக்கிழமை கூறினார்.

மாறாக, ஒருவர் மற்றொருவரின் கலாசாரத்தைப் பற்றிய அறிய திறந்த மனத்துடன் செயல்பட்டு, மற்றவர்களிடம் இருந்து கற்றுக்கொள்வதால், சிங்கப்பூரின் கலாசாரம் வலுவடைந்து அதன் மக்களும் தன்னம்பிக்கையுடன் திகழலாம் என்றார் அவர்.

அதிபர் தேர்தலில் போட்டியிட அமைச்சர் பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து தாம் கலந்துகொண்ட முதல் பொது நிகழ்ச்சியில் திரு தர்மன் இதனைக் கூறினார்.

ரெட்ஹில்லில் உள்ள ஸென் ரென் கோங் பௌத்த ஆலயத்தில் நடைபெற்ற திருவிழாவில் திரு தர்மனும் அவருடைய மனைவியும் கலந்துகொண்டனர்.

சிங்கப்பூர் அதன் நாட்டுப்புறக் கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் உயிரோட்டத்துடன் வைத்திருப்பதாக திரு தர்மன் சொன்னார்.

கோயில்கள் கடவுள், சமயம் சார்ந்தவை மட்டுமல்ல என்பதைச் சுட்டிய அவர், மற்றவர்களின் நலனைப் பார்த்துக்கொள்ள மக்கள் ஒன்றுகூடும் சமூகங்களாக அவை விளங்குகின்றன என்றார்.

சிங்கப்பூர் மேலும் வளர்ச்சியடையும் வேளையில், அத்தகைய பாரம்பரியங்களைத் தக்கவைத்துக்கொள்ள அது வெவ்வேறு பாதையைத் தேர்வுசெய்யலாம் என்று முன்னாள் மூத்த அமைச்சரான திரு தர்மன் கூறினார்.

நிகழ்ச்சியில் தம்மை வரவேற்ற சிங்க நடனக்குழுவில் இந்தியச் சிறுவன் ஒருவன் இடம்பெற்றிருந்ததைச் சுட்டிய திரு தர்மன், இதைப் பார்க்கும்போது அனைவரும் வலுவடைவதாகச் சொன்னார்.

சிங்கப்பூர் வளமான உள்ளூர் கலாசாரத்தை உருவாக்க பல ஆண்டுகள் தேவைப்படக்கூடும் என்றாலும் அந்த நிலையை எட்ட முடியும் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்