தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பேத்திக்குப் பாலியல் வன்கொடுமை: ஆடவருக்கு 12 ஆண்டுச் சிறை

1 mins read
060539d9-82f3-4d24-a1dc-2a742ad81638
தீர்ப்பு அளிக்கப்பட்டபோது பாலியல் குற்றங்களுக்காக எட்டு குற்றச்சாட்டுகள் கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மனைவியின் பிறந்தநாளைக் கொண்டாட குடும்பத்துடன் இரவு விருந்தில் கலந்துகொண்ட பின்னர் 11 வயது பேத்தியை மாடிப்படிக்கு அழைத்துச்சென்று தகாத செயலில் ஈடுபட வற்புறுத்தியதற்காக ஆடவர் ஒருவருக்கு 12 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அவர் அந்தச் சிறுமியை பாலியல் ரீதியாகத் தாக்கியது இது முதன்முறை அல்ல.

இப்போது 68 வயதான அந்த ஆடவர் சிறுமிக்கு 10 வயது இருக்கும்போது அவளிடம் பாலியல் ரீதியாகத் தகாத முறையில் நடந்துகொண்டார். அவர் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக சிறுமிக்கு எதிராகப் பல்வேறு பாலியல் குற்றங்களைப் புரிந்தார்.

திங்கட்கிழமையன்று அந்த ஆடவர் உயர் நீதிமன்றத்தில் கற்பழிப்புக் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.

தீர்ப்பளிக்கப்பட்டபோது பாலியல் குற்றங்களுக்காக எட்டு குற்றச்சாட்டுகளும் கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.

குறிப்புச் சொற்கள்