நிறுவனங்கள் மின்சார வாகனங்களுக்கு மாறும் பந்தயம் சூடிபிடித்துள்ளது. அந்த வகையில் கம்ஃபர்ட்டெல்குரோ என்ஜினியரிங் நிறுவனம் 2023 நான்காம் காலாண்டுக்குள் சீனாவிலிருந்து மின்சார வேன்களை இறக்குமதி செய்து விநியோகிக்கவுள்ளது. அதை மற்ற நிறுவனங்கள் வாங்கிக்கொள்ளலாம் அல்லது வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம்.
போக்குவரத்து பெருநிறுவனமான கம்ஃபர்ட்டெல்குரோவின் துணை நிறுவனமான கம்ஃபர்ட்டெல்குரோ என்ஜினியரிங் சீனாவின் சாங்ஆன் குவாயூ நிறுவனம் உற்பத்தி செய்யும் வர்த்தக மின்சார வாகனங்களின் சிறப்பு விநியோகிப்பாளராகச் செயல்படும்.
2024ஆம் ஆண்டு இறுதிக்குள் சுமார் 100 மின்சார வானகங்களை விற்க கம்ஃபர்ட்டெல்குரோ இலக்கு கொண்டுள்ளது.
‘கேஒய்சி ஸ்டார் வி7’ மின்சார வாகனம், சிங்கப்பூரில் அறிமுகமாகும் கேஒய்சி நிறுவனத்தின் முதல் மாதிரி வாகனம் என்று தெரிவிக்கப்பட்டது. அது சரக்கு மற்றும் பயணிகள் வாகனம் என இரு வகைகளாக விற்கப்படும்.
கம்ஃபர்ட்டெல்குரோ குழுமம் மின்சார வாகனங்களை விநியோகிப்பது பற்றி பரிசீலித்து வருகிறது என்று அக்குழுமத்தின் தலைவரான லிம் ஜிட் போ கடந்த மார்ச்சில் தெரிவித்தார்.
தனது நிறுவனம் மின்சார வாகனங்களை தானே காட்சிக்கூடத்தில் வைத்து விற்பதற்குப் பதிலாக அவற்றை விற்கும் வியாபாரிகளை நியமிக்கும் என்று கம்ஃபர்ட்டெல்குரோ குழுமத்தின் பேச்சாளர் கிரேஸ் வூ கூறினார்.
இந்த முறை வர்த்தக வாகனங்கள் விற்பனையிலும் பயன்படுத்தப்படுகிறது.
இவ்வாண்டு ஜனவரி முதல் மே வரையில், எல்லா இலகுரக வர்த்தக வாகனங்களில் 52.47 விழுக்காடு மின்சார வர்த்தக வாகனங்களைப் பிரதிநிதிக்கிறது. இது இவ்வாண்டு முதலாவது காலாண்டில் ஏறுமுகமாக இருந்தது.
தொடர்புடைய செய்திகள்
மோட்டார் வாகனங்கள் வர்த்தகத்தில் புகழ்பெற்ற கம்ஃபர்ட்டெல்குரோ, 2000ஆம் ஆண்டு முதல் வோல்வோ பேருந்துகளை சிங்கப்பூரில் விநியோகம் செய்துள்ளது.

