பொத்தோங் பாசிரில் புதன்கிழமை காலை ஏற்பட்ட சாலை விபத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட டாக்சி ஓட்டுநர் ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
எஸ்ஜி ரோட் விஜிலாண்டி ஃபேஸ்புக்கில் வெளியிட்ட காணொளியில் கம்ஃபர்ட் டெல்குரோ டாக்சியும் சிவப்பு நிசான் காரும் காணப்படுகின்றன.
பொத்தோங் பாசிர் அவென்யூ1ல் இருந்து வான் தோ அவென்யூ நோக்கிச் செல்லும் பாதையில் போக்குவரத்துக்கு எதிர்த்திசையில் சென்ற அந்த கார் டாக்சியுடன் மோதியதாகத் தெரிகிறது.
காணொளியில் அந்த கார் பின்புறமாகச் செல்வதும் டாக்சியை இடித்தபின் நிற்காமல் சென்றதும் பதிவாகியுள்ளன.
சம்பவம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவுக்குப்பின் 37 நிமிடங்கள் கழித்து இடம்பெற்றதாகக் காவல்துறை கூறியது.
விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்படுவதாக காவல்துறை தெரிவித்தது.