தானா மேரா படகுத்துறை முனையம் அருகே கடலில் நங்கூரமிடப்பட்டு நின்றிருந்த ஒரு கப்பலில் செவ்வாய்க்கிழமை இரவில் தீ மூண்டது என்றும் யாருக்கும் காயம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
அந்தத் தீயை அணைக்க, பிரானி, வெஸ்ட் கோஸ்ட் கடல்துறை தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த சுமார் 40 கடல்துறை தீயணைப்பாளர்களும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையைச் சேர்ந்த கடல்துறை தீயணைப்பு வாகனங்களும் மீட்புக் கலன்களும் அனுப்பப்பட்டதாக அந்தப் படை தெரிவித்தது.
தீ அணைக்கப்பட்ட பிறகு புதன்கிழமை அதிகாலைவரை கப்பல் தரை எங்கும் தண்ணீர் அடித்து குளிரவைக்கப்பட்டது.பாதிக்கப்பட்ட கப்பலின் அனைத்து ஊழியர்களும் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
குடிமைத் தற்காப்புப் படை அங்கு சென்று சேர்ந்ததற்கு முன்பாகவே அந்தக் கப்பலின் சிப்பந்திகள் மூன்று தீயணைப்புக் குழாய்களின் மூலம் அந்தக் கப்பலின் வெளிப்புறத்தைக் குளுமைப்படுத்த ஆயத்தப் பணிகளைச் செய்திருந்தார்கள்.
இரண்டு தண்ணீர்க் குழாய்கள் மூலம் தீயைக் கட்டுப்படுத்தவும் அவர்கள் முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.
கப்பலின் மேற்புறத்றைக் குளிர வைப்பதன் மூலம் அந்தக் கப்பலின் உலோகப் பகுதிகளின் வெப்பநிலையை குறைக்கலாம்.

